இந்த குணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கைராசி இல்லாதவர்கள், முகராசி இல்லாதவர்கள் என்று சமூகத்தால், உங்களுக்கே தெரியாமல் ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்!

amman

நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ நடக்கக்கூடிய நல்ல விஷயங்களை இந்த சமுதாயத்திற்கும், நம்முடைய உறவினர்களுக்கு வெளியே சொல்லும் போது, நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, கண் திருஷ்டி படாமல் இருக்க, அந்த சந்தோஷமான விஷயத்தை எப்படி வெளியில் சொல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், நம்மிடம் யாராவது வந்து அவர்களுடைய சந்தோஷத்தையோ அல்லது அவர்கள் வீட்டில் நடக்கும் சுப காரியத்தையும் பகிர்ந்து கொள்ளும்போது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய அன்றாட, தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கு மிகமிக தேவைப் படக்கூடிய, அனைவரும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயம் தான் இது.

family

நம்முடைய வீட்டில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றது என்றால், நீங்கள் ஒரு புது வீடு கட்டி விட்டீர்கள், உங்களுடைய பையனுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிட்டது, மீண்டும் பையனுக்கும் நல்ல இடத்தில் அழகான பெண் வரன் அமைந்து விட்டது, திருமணமும் நன்றாக முடிந்துவிட்டது, இப்படியாக தொடர் நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் சுபமாக நடந்து கொண்டே இருந்தால், இந்த ஒவ்வொரு விஷயங்களையும் வெளியாட்களிடம் சொல்லும் போதும் சரி, உங்களுடைய நெருங்கிய அல்லது தூரத்து சொந்த பந்தங்களிடம் சொல்லும்போது சரி, உங்களது தற்பெருமைகளை பேசவே கூடாது.

எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய வீட்டை கட்டி முடித்து விட்டேன். இதற்கு நான் எவ்வளவு படாதபாடு பட்டேன் என்று தெரியுமா? என்னுடைய பையனை வளர்ப்பதற்கு நான் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. என்னால்தான் இப்படிப்பட்ட பெரிய வாழ்க்கை, என்னுடைய பையனுக்கு அமைந்தது பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்து விட்டேன். என்ற தற்பெருமையை தவிர்த்துவிட்டு, இறைவனின் அருளால் தான், எங்களுடைய வீட்டில் சுப காரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது என்றும், இறைவனின் பெயரை சொல்லி, உங்கள் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் புகழை இறைவனிடம் சேர்த்துவிட வேண்டும்.

family1

அப்போது நம் வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியும் தடைபடாமல் நடக்கும். அடுத்தவர்களின் கண் திருஷ்டியும் நம் மேல் விழுந்து, நம் வீட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. உங்கள் வீட்டில் நடக்கும் நல்ல விஷயத்திற்கு காரணம் உங்கள் குலதெய்வம் தான், உங்களுடைய முன்னோர்கள் தான் என்று அவர்கள் மீது பாரத்தைச் சுமத்தி விடுங்கள்! மற்றதெல்லாம் தானாக நடக்கும். முற்றிலுமாக தற்பெருமையை தவிர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. அது உங்களுக்கு ஆபத்தாக முடியும் இறுதியில்.

- Advertisement -

சரிங்க, உங்க கிட்ட அடுத்தவர்கள் வந்து இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது, எக்காரணத்தைக் கொண்டும் பெரு மூச்சு விடவே கூடாது. அவர்களுக்கு நடப்பதில் ஒன்று கூட நம் பிள்ளைகளுக்கும், நம் வீட்டிலும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்குள் வரக்கூடாது. என்ன செய்வது? மனித இயல்பு, கட்டாயம் அந்த ஏக்கம் வரும். இருப்பினும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

sad-crying

அந்த இறைவனின் ஆசிர்வாதத்தால் உங்கள் வீட்டில் நடக்கக்கூடிய விசேஷங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும். யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என்றவாறு சொல்ல வேண்டும்? வாயில் மட்டும் சொல்லுவதோடு விடாமல், மனதார இறைவனையும், அடுத்தவர்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் நல்லபடியாக நடக்க  வேண்டிக் கொள்ளுங்கள். அவர்கள் வீட்டில் நடக்க கூடிய விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று!

kamatchi-amman

இதையெல்லாம் விட்டுவிட்டு, ‘வீட்ல தொடர்ந்து விசேஷம் போல, எல்லாமே நல்லதா நடக்குது! பரவாயில்லைங்க! எங்க வீட்லதா ஒரே பிரச்சனை. உங்க வீட்லயாவது எல்லாரும் நிம்மதியா இருக்காங்களே, ரொம்ப ரொம்ப சந்தோசம்! அப்படின்னு பெருமூச்சு விட்டா, உங்ககிட்ட யாரும் எந்த நல்ல விஷயத்தையும் வந்து முதல்ல சொல்லவே மாட்டாங்க. ‘அவங்க கிட்ட போய் சொன்னாலே பிரச்சனை தாங்க, எதையாவது ஒன்றை சொல்லி குழப்பி விட்டு வாங்க,’ அது மட்டும் இல்லாம, ‘அவங்ககிட்டப் பொய் சொல்ற ஒரு நல்ல விஷயம் கூட பிரச்சனை இல்லாமல் முடியவே மாட்டேங்குது,’ அப்படின்னு சொல்லி உங்களை இந்த சமூகம் ஒதுக்கி விட ஆரம்பிக்கும்.

irukkankudi-amman

உங்களிடம் ஒரு நல்ல விஷயத்தை யாராவது வந்து சொல்லி சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் பட்சத்தில், உங்களிடம் வந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்பவர்களுக்கு, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது, தொடர்ந்து உங்களிடம் வந்து நல்ல செய்திகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது நீங்கள் ராசியான வர்களாக அதிர்ஷ்டம் உடையவர்களாக மாறிவிடுவீர்கள்.

sad

உங்களிடம் வந்து மற்றவர்கள் நல்ல விஷயத்தை சொல்லி சென்ற பின்பு நீங்கள் புலம்பித் தீர்த்தால் கூட, கட்டாயம் உங்களிடம் நல்ல செய்தி சொன்னவர்களுக்கு நல்லது நடக்காது. அப்போதே அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள், உங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று! இதோடு மட்டும் விட்டுவிடுவார்களா? உங்களைப் பற்றி நாலுபேரிடத்தில் போய் சொல்ல, உங்களுக்கே தெரியாமல் இந்த சமூகத்தினரால் நீங்கள் ஒதுக்கப்பட்டு விடுவீர்கள். இனி இந்த தவறுகளை நீங்கள் செய்தால் திருத்திக்கொள்வது உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களுடைய வாழ்க்கைக்கும் தான் நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
விளக்கு வைத்த பின்னர் அவசர தேவைக்கு கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.