திருஷ்டி சுற்றுவது அவசியம் தானா ?

dhristi

பொதுவாக புதுமண தம்பதிகளுக்கும் , குழந்தைகளுக்கும், வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது வழக்கம். இதற்கு காரணம் அவர்கள் மீது ஏதாவது கண் திருஷ்டி இருந்தால் அது விலக வேண்டும் என்பதே.

திருஷ்டியை சிலர் எலுமிச்சை பழம் கொண்டு சுற்றுவர் சிலர் ஒரு தட்டில் சுண்ணாம்பு, சிகப்பு போன்றவற்றை கலந்து அதற்கு மேல் ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் சூடம் ஏற்றி சுற்றுவர்.

இப்படி பல விதமாக கண் திருஷ்டியை கழித்தாலும், நரசிம்மர், காளி, துர்கை போன்ற தெய்வங்களை வழிபடும் இடத்தில எந்த ஒரு கண் திருஷ்டியோ அல்லது தீய சக்தியோ நெருங்க முடியாது. ஆகையால் அது போன்ற இடங்களில் திருஷ்டி சுற்ற வேண்டிய அவசியம் இல்லை.