நினைத்தது நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு

anjaneyar valipadu
- Advertisement -

கலியுக தெய்வத்தில் ஒருவராக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர். நாம் வணங்கக்கூடிய அனைத்து தெய்வங்களும் தேவலோகத்திலும், பிரம்மலோகத்திலும், சிவலோகத்திலும், வைகுண்டத்திலும் இருப்பார்கள். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும்தான் நாம் வாழும் இந்த உலகத்தில் இருந்து நமக்கு அருள் புரிகிறார். அதனால் நாம் நம்முடைய கஷ்டம் தீருவதற்கு நம்முடனே இருக்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது விரைவிலேயே நமக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு காரியத்தை நாம் நினைத்து அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டுகிறோமோ அந்த காரியம் நம்முடைய தகுதிக்குட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அது நியாயமான கோரிக்கையாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வழிபாட்டின் பலனை நம்மால் பெற முடியும். நம்முடைய தகுதிக்கு மீறியோ, பேராசையுடமோ, பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடனோ எந்த ஒரு காரியத்தை நினைத்து வேண்டினாலும் அந்த காரியம் நிறைவேறாது என்பதை மனதில் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக ஆஞ்சநேயரை நாம் வழிபட வேண்டும் என்றால் அனைவருக்கும் அறிந்த ஒரு வழிபாட்டு முறைதான் ஸ்ரீ ராமஜெயம் எழுதி மாலையாக ஆஞ்சநேயருக்கு அணிவிப்பது. இந்த வழிபாட்டை செய்வதோடு இன்னும் ஒரு வழிபாட்டை நாம் செய்தோம் என்றால் அதனுடைய பலன் இன்னும் அதிகமாகவே நமக்கு கிடைக்கும். அந்த வழிபாடுதான் ஆஞ்சநேயரின் வால் வழிப்பாடு.

இந்த வழிபாட்டை ஆஞ்சநேயருக்குறிய நட்சத்திரமான மூல நட்சத்திரம் அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை போன்ற நாட்களில் ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் ஆஞ்சநேயரின் படம் தேவை. அந்த படத்தில் ஆஞ்சநேயரின் வால் நன்றாக தெரியும் படி இருக்க வேண்டும். என்றைக்கு நாம் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறோமோ அன்றைக்கு காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஆஞ்சநேயரின் படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அவருக்கென்று தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இரண்டு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். இப்பொழுது புதிதாக ஒரு நோட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த நோட்டில் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறியவாறு 108 முறை எழுத வேண்டும். பிறகு இந்த ஸ்ரீ ராம ஜெயத்தை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். பிறகு ஆஞ்சநேயரின் வாலின் அடியில் சந்தனம் குங்குமம் வைத்து ஒரு பொட்டு ஒன்று வைக்க வேண்டும்.

மறுநாளும் இதே போல் ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்து விட்டு நாம் ஏற்கனவே வாலில் பொட்டு வைத்திருப்போம் அல்லவா அதற்கு பக்கத்தில் மற்றொரு பொட்டை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 48 நாட்கள் நிறைவடைந்து 49 வது நாள் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் பிரச்சினை தீர விநாயகர் தீபம்

இந்த முறையில் ஆஞ்சநேயரை நாம் முழுவதுடன் வழிபடுவதன் மூலம் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார்.

- Advertisement -