பாவங்களை போக்கும் பஞ்சலிங்க பரிகாரம்.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு தொடர்ந்து கஷ்டங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் முதலில் நம் வாயில் வரும் வார்த்தை ‘எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ! இன்று இப்படி கஷ்டத்தை அனுபவிக்கின்றேன்’ என்றுதான் முதலில் கூறுவோம். ஏனென்றால் நாம் செய்த புண்ணியத்திற்கு பலன் கிடைக்கின்றதோ இல்லையோ, செய்த பாவத்திற்கான பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி. நாம் செய்த எல்லா வகையான பாவத்திற்கும் பிராயச்சித்தம் உண்டா என்று கேட்டால்! நிச்சயம் இல்லை. சில பாவத்திற்கு பிராயச்சித்தம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தால், அந்த தண்டனையை அனுபவித்து, பட்டு தெளிந்த பின்புதான் விமோர்சனம் கிடைக்குமே தவிர, என்ன செய்தாலும் சில தண்டனைகளிலிருந்து நம்மால் தப்பித்து விட முடியாது. முடிந்தவரை பாவங்களை செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் சில பாவங்களுக்கு பரிகாரத்தின் மூலம் விமோர்சனம் பெற முடியும். எல்லோரும் அறிந்து, எல்லா பாவங்களையும் செய்வதில்லை. அறியாமல் செய்த பாவம் என்ன என்பதையும் நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. இப்படியிருக்க என்ன பரிகாரம் செய்வது?

Panjalingam

உங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் கஷ்டங்களுக்கு, நீங்கள் செய்த பாவங்கள் தான் காரணமாக இருக்கலாம் என்பது, உங்கள் ஜாதக கட்டத்திலேயே தெரிந்துவிடும். அந்த பாவங்கள், தீர்க்க கூடிய பாவங்களாக இருந்தால், இந்த பஞ்ச லிங்க பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். நம் செய்த பாவத்திற்கு கட்டாயமாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று சாட்சியாக இருந்திருக்கும். ஆகவே இந்த ஐம்பூதங்களை மனதில் நினைத்துக்கொண்டு ஐந்து சிறிய அளவிலான லிங்கங்களை வாங்கி வைத்து பூஜை செய்வதன் மூலம் நம்மால் நல்ல பலனை அடைய முடியும். இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஐந்து லிங்கங்களில் முதல் லிங்கத்தை நிலத்தில் வைத்து, நில ரீதியாக ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் அதையும், என் மனதார இந்த பூமியில் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, பூவினால் அர்ச்சனை செய்து வேண்டி கொள்ளுங்கள். இரண்டாவது லிங்கமான நீர் லிங்கத்திற்கு தண்ணீரிலும், பாலிலும் அபிஷேகம் செய்து தண்ணீர் மூலமாக ஏதாவது பாவங்கள் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். மூன்றாவது லிங்கத்திற்கு அக்னியை சாட்சியாக வைத்து பாவமன்னிப்பு கேட்க, கற்பூர ஆராதனை காட்டி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். நான்காவதாக ஆகாச லிங்கத்தை சூரியனின் முன்பு வைத்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்தாவதாக வாயு லிங்கத்தை வைத்து மனதார ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இனி அறியாமல் கூட எந்த பாவத்தையும் செய்ய மாட்டேன் என்று வாய்விட்டு கூறி பிரார்த்தனை செய்வது நல்ல பலனைத் தரும். இப்படியாக பஞ்சபூதங்களிடம் மன்னிப்பு கேட்டு செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம்.

Panjalingam1

இறுதியாக ஐந்து லிங்கத்தையும் ஒன்றாக வைத்து, தீப தூப ஆராதனை காட்டி வழிபடுவது நல்ல பலனைத் தரும். பரிகாரம் செய்த இந்த ஐந்து லிங்கங்களையும் ஒரு பிராமணருக்கு வெற்றிலை பாக்கு, வஸ்திரம் இவைகளை வைத்து தானமாக கொடுத்து விட வேண்டும். உங்கள் பாவங்கள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு இது ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வெற்றியைத் தரும் வெற்றிலையின் ரகசியம் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? யாரும் அறியாத சூட்சமம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panjalingam. Pavam in tamil. Karmavinai nenga vazhigal in Tamil. Karmavinai theera in Tamil.

- Advertisement -