தவறியும் இந்த இரண்டு பொருட்களை மட்டும் வீட்டு வாசலில் வைத்திருக்காதீர்கள். சகலவிதமான ஐஸ்வர்யமும் நம்மை விட்டு போய்விடும்

lakshmi-broom
- Advertisement -

நல்ல குடும்பம் என்பது வீட்டில் உள்ளவர்களின் மகிழ்ச்சியை பொருத்துதான் அமைகிறது. இவ்வாறு ஒரு வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதலில் அந்த வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும். பணக்கஷ்டம் இருக்கக் கூடாது, மனக்குழப்பங்கள் இருக்கக்கூடாது, சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. வெளியில் சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எப்பொழுது நமது வீட்டிற்கு சென்று உட்காருகிறமோ அப்போது தான் நமக்கு நிம்மதி என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அந்த வீடு சுபிட்சமானதாக இருக்கும். எந்த வீட்டில் நிம்மதி நிலவுகிறதோ அந்த வீடு தெய்வ கடாட்சம் பொருந்தியதாக இருக்கும். இவ்வாறு வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் இந்த இரண்டு பொருட்களை மட்டும் தவறிக்கூட வீட்டு வாசலில் வைத்து விடக்கூடாது. வாருங்கள் அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

FAMILY

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாசத்துடன், மகிழ்ச்சியாக இருந்தாலும், வீட்டிற்கு வருபவர்கள் இந்த வீட்டிற்குள் வந்தால் மன நிம்மதி கிடைக்கிறது என்று சொன்னாலும் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி வீட்டிற்குள் இருக்கின்ற லட்சுமி நிரந்தரமாக நமது வீட்டிலேயே தங்குவதற்கு சில எதிர்மறை செயல்களை செய்வதென்பதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு வீட்டிலுள்ள பெண்கள் தினமும் தவறாமல் செய்ய வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் காலையில் எழுந்தவுடன் வாசல் கூட்டி பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட வேண்டும். அது சிறிய வீடாக இருந்தாலும் சரி, அப்பார்ட்மெண்ட்ஸாக இருந்தாலும் சரி அவர்களது வீட்டின் வாசலில் சிறிய கோலமாவது போட்டு வைக்கவேண்டும். அடுத்ததாக தீய எண்ணங்களையும், தீய வார்த்தைகளையும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

women1

அடுத்ததாக ஒரு வீடு என்றால் வீட்டில் உள்ள பொருட்களை வைப்பதற்கு என்று தனித்தனி இடங்கள் இருக்கும். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நறுமணம் வீசும் வீட்டில்தான் லட்சுமிதேவி நிரந்தரமாக வாசம் செய்வாள். எனவே வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு வீட்டை பெருக்க பயன்படுத்தும் துடைப்பத்தை வீட்டு வாசலில் அங்குமிங்குமாக போட்டு வைக்கக்கூடாது. அதனை வீட்டின் கதவுக்கு நேராக வைத்து விடக்கூடாது. மற்றவர்களுக்கு தெரியாமல் அதனை ஓரமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் நம்மைத் தாங்கி நிற்கும் காலணிகளை வீட்டு வாசலில் கழற்றி விட கூடாது.

seruppu-slipper

கதவை திறந்ததும் மற்றவர்கள் கண்ணில் படும்படி இந்த செருப்பை வீட்டின் வாசலில் வைக்கக்கூடாது. இதனை செருப்பு வைப்பதற்கென்று இருக்கும் அலமாரியில் வைத்து விடவேண்டும். அல்லது மற்றவர் கண் படாமல் ஓரமாக வைக்க வேண்டும். வீட்டின் வாசல் வழியாக வரும் மகாலட்சுமி முதலில் செருப்பு மற்றும் துடைப்ப பார்க்க வேண்டி இருந்தால் அவர்கள் வீட்டிற்குள் வராமல் அப்படியே வந்த வழி திரும்பி விடுவார்கள். எனவே நமது வீட்டில் ஐஸ்வர்யம் என்பது தங்காமல் போய்விடும்.

- Advertisement -