வீட்டில் செல்வ வளம் கோடிகோடியாக கொட்ட, நில வாசல்படிக்கு உள்பக்கம் இந்த சுவாமியின் படத்தை மாட்டி பாருங்கள்! வீட்டிற்குள் பணம் வந்து கொண்டே இருக்கும்.

money

நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு எந்த தங்கு தடையும் இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய ஆசையாகவும், கனவாகவும் இருக்கின்றது. இந்தக் கனவை நனவாக்க, ஆன்மீக ரீதியாக சுலபமான முறையில் எந்த வழிபாட்டை செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் நில வாசல் படியில், இந்த ஒரு படத்தை மாட்டி வைத்து பாருங்கள். அதன் பின்பு, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குபேரரது சிலைக்கு அருகில் இந்த சத்தத்தை எழுப்பி கொண்டே இருங்கள். பிறகு நடக்கும் அதிசய மாற்றத்தை!

iswareshwarar

உங்கள் வீட்டில் நில வாசல் படிக்கு உள்பக்கத்தில், மேல் பக்கம், வீட்டிற்குள் பார்த்தவாறு ஐஸ்வரேஸ்வரர் திருவுருவப்படத்தை மாட்டுவது மிகவும் நல்லது. ஐஸ்வரேஸ்வரர், லட்சுமி தேவி மற்றும் குபேரருடன் சேர்ந்து செல்வ வளத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த திருவுருவப்படத்தை தினமும் நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். ஐஸ்வரேஸ்வரர் கையிலிருந்து செல்வம் எப்படி கொட்டிக்கொண்டே இருக்கின்றதோ, அதேபோல் உங்களுடைய வீட்டிலும் பண மழை பொழியும் என்பது தான் நம்பிக்கை.

தினமும் நில வாசல் படிக்கு மேல் பக்கம் இருக்கக்கூடிய அந்த ஐஸ்வரேஸ்வரர் திருவுருவ படத்திற்கு முன்பாக, ஒரு சிறிய ஸ்டூல் போட்டு கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு கிண்ணத்தில் 5 ஏலக்காய்களை வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு கிண்ணத்தில் இனிப்பு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் வெல்லம் அல்லது பேரீச்சம்பழம் அல்லது நாட்டு சர்க்கரை, தேன் எதை வேண்டு மென்றாலும் வைத்துக் கொள்ளலாம்.

guberar2

இந்த இரண்டையும் அந்த இறைவனுக்கு படைத்து விட்டு, இதே இரண்டு கிண்ணங்களை கொண்டுபோய் உங்களுடைய வீட்டில் குபேரர் சிலை இருந்தால், அந்த குபேரனின் சிலைக்கு முன்னாலும் இதே பிரசாதங்களை வைத்து, மனதார பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த பிரசாதத்தை நீங்கள் சாப்பிட்டு விடவேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு, அந்த குபேரரது பொம்மைக்கு பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அல்லது சில்வர் டப்பாவில் எப்போதுமே ரூபாய் நாணயங்களை நிரப்பி வைத்து வைக்க வேண்டும். இந்த பூஜையை செய்யும் போது அந்த நாணயம் டப்பாவை எடுத்து குலுக்கினால் கூட போதும், அந்த சில்லறைகள் எழுப்பும் சப்தம் வரும் அல்லவா?

coins

அந்த சப்தத்தை எழுப்பி ‘ஓம் குபேராய போற்றி!’ என்று மூன்று முறை உச்சரித்தால் நிச்சயமாக வீட்டில் வறுமை நீங்கும். சில்லரை சத்தத்தோடு குபேரரை நீங்கள் வேண்டினால், அந்த வேண்டுதல் குபேரர் காதுகளில் விழும் என்பதும் நம்பிக்கைதான். வீட்டில் செல்வ வளம் கொழிக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

mahalakshmi-selvam-gold-coins

ஒருவேளை உங்களுடைய வீட்டில் குபேரன் சிலை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஐஸ்வரேஸ்வரர் திருவுருவப்படத்தை நில வாசப்படிக்கு உள்பக்கம், மேல் பக்கம் மாட்டிவிட்டு இந்த பூஜையை செய்தாலும் தவறு கிடையாது. சுலபமான இந்த பரிகாரத்தை தினமும் செய்யலாம். முடியாதவர்கள் வாரம் தோறும் வரும் வியாழக் கிழமைகளில் மட்டுமாவது செய்தால் நல்ல பலனைப் பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்துகொள்ளும்.