வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க வேண்டும், சிறப்புடன் வாழ வேண்டும், நான்கு பேர் மதிக்கும் வகையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஐஸ்வர்யம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபாடு செய்தால் அவள் மனம் மகிழ்ந்து ஐஸ்வர்யத்தை வழங்குவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஐஸ்வரியத்தை தரும் அதிர்ஷ்ட தீபம்
வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று எந்த வித குறையும் இல்லாமல் வாழக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பாக இருக்கும். அவர்கள் அருளால் தான் அனைத்து விதமான ஐஸ்வர்யத்தையும் பெற்று ஒருவரால் சிறப்பாக வாழ முடியும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இந்த ஒரு குறிப்பிட்ட தீப வழிப்பாடு நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
இந்த தீப வழிபாட்டை நாம் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ஐஸ்வர்யத்தை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாருக்கு நாம் இரண்டு வகைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். இந்த இரண்டு தீபங்களையும் நாம் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிரஹோரையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதுவும் காலை நேரத்தில் இருக்கக்கூடிய 6 மணியிலிருந்து 7 மணி ஆகவும் இருக்கலாம் அல்லது இரவு நேரத்தில் வரக் கூடிய 8 மணியில் இருந்து 9 மணி ஆகவும் இருக்கலாம்.
இந்த இரண்டு தீபங்களையுமே தொடர்ச்சியாக 16 வாரங்கள் ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு நடுவில் வரக்கூடிய தீட்டை விட்டுவிட்டு மீதம் இருக்கக்கூடிய வாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். முதல் தீபமாக மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நெல்லிக்காய் திகழ்கிறது. நெல்லிக்காயின் மேல் பக்கத்தை பள்ளமாக எடுத்து அதற்குள் நெய் ஊற்றி ஒரு நெல்லிக்காயில் பூ திரியும் மற்றொரு நெல்லிக்காயில் சாதாரண பஞ்சு திரியும் போட்டு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை 8 அல்லது 16 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
நெல்லிக்கனி தீபத்திற்கு பதிலாக ஏற்றக்கூடிய தீபமாக தான் மாவிளக்கு தீபம் திகழ்கிறது. இந்த மாவிளக்கு தீபத்தையும் மேற்சொன்ன அதே வழிமுறைப்படி மகாலட்சுமி தாயாரின் ஆலயத்திற்கு சென்று தீபமேற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலமும் நமக்கு ஐஸ்வரியம் பெருகும். இந்த தீப வழிபாட்டை வீட்டில் செய்வதை விட ஆலயத்தில் செய்வதே சிறப்பாக கருதப்படுகிறது.
ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு முன்பாக அந்த இடத்தை சுத்தம் செய்து மஞ்சளை தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவினால் தாமரைப்பூ கோலத்தை போட்டு அந்த தாமரைப்பூ கோலத்திற்கு மேல் ஏதாவது ஒரு இலையை வைத்து அதற்கு மேல் இந்த தீபத்தை ஏற்றுவது என்பது மிகப்பெரிய பலனைத் தரும். முழு நம்பிக்கையோடு மகாலட்சுமி தாயார் நமக்கு அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்குவார் என்ற நம்பிக்கையோடு அந்த செல்வத்தை பெறுவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருளால் அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும் அதன் மூலம் ஐஸ்வர்யம் பெருக்கும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் லட்சுமி குபேரர் மந்திரம்
அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்கிய ஐஸ்வரியத்துடன் வாழ வைக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.