சில பேருக்கு வாழ்வில் தீராத துன்பம் இருக்கும். பணம் காசு சம்பாதிக்க வழி இருக்காது. வழி தெரிந்தால் அந்த முயற்சிகள் வெற்றி அடையாது. காலம் காலமாக குடும்பம் கஷ்டத்தில் தான் வாடி வதங்கும். இவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒருநாள் கூட நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களை ஒரு வரியில், ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் துரதிஷ்ட சாதிகள், அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள்.
பிறந்ததிலிருந்து துரதிஷ்ட சாலிகளாக இருப்பவர்களுக்கு கூட அதிர்ஷ்டம் அடிக்கும். எப்போது தெரியுமா. விநாயகருக்கு இந்த கொழுக்கட்டையை செய்து கொடுக்கும் போது, நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக மாறலாம். உங்களுடைய கைகள் ராசியான கைகளாக மாறும், ஜாதக கட்டத்தில் நவகிரகத்தின் மூலம் பிரச்சினை இருக்கிறது, உன்னுடைய தலையெழுத்து மாறவே மாறாது என்று சொல்லியிருந்தாலும் சரி, உங்கள் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி இந்த விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு.
கொஞ்சம் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய பரிகாரம் தான். இருந்தாலும் இதை செய்து முடிக்கும் போது நீங்கள் வாழ்க்கையில் ரொம்பவும் பெரிய மனிதர்களாக, உயர்ந்த மனிதர்களாக மாறி இருப்பீர்கள். அந்த வழிபாடு என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
விநாயகர் பூரண கொழுக்கட்டை பரிகாரம்
பிள்ளையாருக்கு உங்கள் கைகளால் 1008 பூரண கொழுக்கட்டை செய்து கொடுக்க வேண்டும். உடனே பயந்து விடாதீர்கள். ஒரு முறையில் 1008 பூரண கொழுக்கட்டையை செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒவ்வொரு சங்கடஹர சத்தத்திற்கு 58, 108, இப்படி கணக்கு வைத்து கொழுக்கட்டையை செய்து கொண்டு போய் விநாயகருக்கு நெய் வைத்தியம் செய்து உங்கள் கைகளால் இந்த கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குழந்தைகளுக்கு, கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகம் கேட்பவர்களுக்கு, தானம் கொடுக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை பரிபூரணமாக பூரணம் அடையும். இதோ நாளையிலிருந்து மார்கழி மாதம் பிறக்கவிருக்கிறது. மார்கழி மாதம் ஒரு நாளில் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். மார்கழி மாதம் நீங்கள் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் அது பல லட்சம் மடங்கு பலனை கொடுக்கும்.
பூரணம் கொழுக்கட்டை தேங்காயால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, தேங்காயில் வெல்லம் சேர்த்து பூரணம் தயார் செய்து, அதை அரிசி மாவுக்கு உள்ளே வைத்து கொழுக்கட்டை பிடிப்பார்கள், அல்லவா. அந்த கொழுக்கட்டையை தான் நீங்கள் 1008 விநாயகருக்கு செய்து கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதம் கொடுக்கும் கொழுக்கட்டையை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள், 11 கொழுக்கட்டை ஒரு மாதம் செய்து கொடுத்தால் கூட தவறு கிடையாது. ஆனால் 1008 கொழுக்கட்டைகள் உங்கள் கையால் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து, முடிக்கும் தருணம், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் விலகி, உங்கள் வாழ்க்கை பரிபூரணம் அடைந்திருக்கும். பூரண கும்பம் என்பதும் தேங்காயை தான் குறிக்கும்.
இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் நீக்கும் தீக்குச்சி பரிகாரம்
பூரண கும்ப மரியாதை என்று கூட சொல்லுவார்கள். பரிபூரணமான வாழ்க்கை உங்களுக்கு தேவை என்றால், இந்த பூரண கொழுக்கட்டையை செய்து விநாயகர்களுக்கு கொடுப்பதுதான் ஒரே வழி. சிரமம் பார்க்காமல் செய்து பாருங்கள். இந்த பரிகாரம் எப்படி வேலை செய்யும் என்பது உங்களுக்கே புரியும். நம்பிக்கை உள்ளவர்களை விநாயகர் என்றுமே கைவிடமாட்டார். அதிலும் விநாயகருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பூரண கொழுக்கட்டை செய்து கொடுப்பவர்களுக்கு விநாயகர் செல்வ வளங்களை வாரி வாரி வழங்குவார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.