உங்கள் வீட்டில் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் பணக் கஷ்டத்தோடு மன கஷ்டமும் இருக்கத்தான் செய்யும்.

எல்லோருக்கும் நிம்மதியான, அதிர்ஷ்டமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் எல்லோராலும் பணக்கஷ்டம் இல்லாமலும், மனக்கஷ்டம் இல்லாமலும் வாழ்ந்திட முடியாது. ஒருவகையில் பணக்கஷ்டமாவது இருக்கும். அல்லது பணம் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மன கஷ்டமாவது இருக்கும். இப்படி இரண்டு வகைப்பட்ட கஷ்டங்களுக்கும் சில காரணங்கள் உண்டு. நம் கஷ்டங்களுக்கு காரணமாக இருக்கும் பொருட்களை நம் வீட்டில் வைக்கக் கூடாது, என்று நம் முன்னோர்கள் சிலவற்றை கூறியுள்ளார்கள். அது என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

silanthivalai

நம் வீட்டில் கஷ்டங்களை உண்டாக்குவதில் முதலிடத்தில் இருப்பது சிலந்தி வலை, ஒட்டடை. சிலந்தி வீடு கட்டியது போன்ற வலைகள் நம் வீட்டில் இருக்கவே இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும் கூட அதை உடனடியாக அகற்றி விட வேண்டும் வீட்டு மூலைமுடுக்குகளில், கதவுகளின் பின்புறத்தில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒட்டடைகள் வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும் ஒன்றாக கூறப்படுகிறது.

நம் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டினுள்பகுதியிலோ தேனீக்கள் கூடு கட்ட கூடாது. தேனீக்களிலிருந்து எடுக்கப்படும் தேன் அபிஷேகம் போன்ற தெய்வ காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும், இந்த தேனீ கூடுகள் வீட்டில் இருந்தால், வீட்டில் துரதிஷ்டம் உண்டாகும் என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. தேனியின் கொடுக்கில் விஷத்தன்மை இருக்கும். மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தேனி வீட்டில் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இதை கூறியிருக்கலாம்.

honey-bee

பொதுவாக வீட்டில் பறவைகள் கூடு கட்டினால் அது நல்லது. அந்த கூட்டை கலைக்க கூடாது என்பதுதான் நம் முன்னோர்களின் கூற்று. ஆனால் குறிப்பிட்ட இந்தப் புறா கூடு மட்டும் வீடுகளில் இருக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி புறா ஒரு வீட்டில் கூடு கட்டி இருந்தால் அந்த வீட்டில் பண கஷ்டமும், வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமானது நன்றாக இருக்காது என்றும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

குடி இருக்கும் வீடுகளில் நிச்சயமாக வவ்வால் வாசம் செய்யக்கூடாது. அப்படி ஒரு வீட்டினுள் வவ்வால் தங்கும் அளவிற்கு இட வசதிகள் இருந்தால் அந்த வீட்டில் துரதிஷ்டம் நிச்சயம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்த வீட்டில் எதிர்பாராத உயிர் இழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாக நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதனால் முடிந்தவரை உங்கள் வீட்டில் வவ்வால் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Bat

உடைந்த கண்ணாடி வீட்டில் கட்டாயம் இருக்கக்கூடாது. அந்த கண்ணாடியானது கடிகாரம் கண்ணாடியில் விரிசல் விட்டு இருந்தாலும் கூட அது தவறுதான். அந்த கடிகாரத்தை உடனடியாக மாற்றி விட வேண்டும். முகம் பார்க்கும் கண்ணாடியில் லேசாக விரிசல் விட்டு இருந்தாலும் கூட அது நம் வீட்டில் இருக்கக்கூடாது. உடைந்தால் தான் மாற்ற வேண்டும் என்று விரிசல் விட்ட கண்ணாடியை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். அது தரித்திரத்தை உண்டாக்கும். உங்கள் கையில் அணிந்திருக்கும் வளையல் கண்ணாடி வளையலாக இருந்தால், அதில் விரிசல் இருந்தால் கூட தவறுதான். உங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தாலும் தவறுதான்.

இதேபோல் வீட்டில் காய்ந்த பூக்கள் இருப்பது மிகவும் தவறான ஒன்று. சுவாமி படங்களுக்கு வைத்திருக்கும் பூக்கள் காய்ந்து விட்டால் உடனடியாக எடுத்துவிட்டு மாற்றிவிடுங்கள். வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை தான் சுவாமி படங்களுக்கு பூ வாங்கி சாத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினம்தோறும் பழைய பூக்களை மாற்றிவிட்டு புதிய பூ வைப்பது நன்மை தரும். அதேபோல் வாடாமல் செழுமையாக இருக்கும் பூக்களையும் தூக்கி வீச கூடாது அதுவும் தவறு.

pooja-room

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி பார்க்கப்படும் ஒரு வீடானது நிச்சயம் மகாலட்சுமியின் அம்சத்தை பெற்று மன நிம்மதியோடு இருக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
அருள்மிகு ஓதிமலை முருகன் கோவில் தல வரலாறு

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vettil thavirkka vendiyavai. Vettil seiyya kodatha mistakes. Vettil seiyya kodatha thavarugal. Vettil thurathistam reason Tamil.