சித்தர்கள் கூறியபடி விளக்கு மூலம் நினைத்ததை அடையும் ரகசியம் – வீடியோ

Deepam

நாம் வாழும் இப்பூமி “பஞ்சபூதங்களான” நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பஞ்சபூதங்களின் தன்மையிலேயே இப்புவியில் அனைத்து உயிர்களும் தோன்றுகிறது. அவை இறந்த பின்பு மீண்டும் அந்த பஞ்ச பூத தத்துவங்களிலேயே கலந்து விடுகிறது. அப்படியான இந்த பஞ்சபூதங்களை தங்களின் யோகசக்தியால் கட்டுப்படுத்தும் வழிகளை அறிந்தவர்கள் தான் “சித்தர்கள்”. அந்த வழிகளை சாமானிய மக்களும் பயன்படுத்தி அவர்களின் வாழ்வு மேம்பட எண்ணி இதைப் பற்றி பல ஓலைச்சுவடிகளை எழுதிச் சென்றனர். காலவோட்டத்தில் ரகசிய கலைகளாக மாறிப்போன இவ்வழிமுறைகள், பொது நல எண்ணம் கொண்ட ஒரு சிலரால் அவ்வப்போது வெளிப்படுத்தப் படுகிறது. அது போன்ற ஒரு வழிபாட்டு முறையை இதை வீடியோவில் பார்ப்போம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

“இயற்கைச்சித்தர்” என்று அழைக்கப்படும் இவர் மக்களின் நல்வாழ்விற்கு உகந்த பல விடயங்களை பலருக்கும் கூறுகிறார். நமக்குள் உள்ள பாவங்களை போக்குவது எப்படி?, நாம் எப்படி வழிபட்டால் நமது எண்ணங்கள் ஈடேறும் என்ற பல தகவல்களை அவர் விளக்கியுள்ளார். இவர் கூறிய வழிபாட்டு முறைகள் அனைத்தும் மிகவும் எளிமையானதாகும்.

இவரின் கூற்றுப்படி ஒவ்வொரு குறிப்பிட்ட வகையிலான எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதால் அத்தீப ஒளியால் தெய்வீக சக்தி உருவாகி நமக்கு நன்மைகளை செய்யும் என்றும், சில குறிப்பிட்ட முறைகளில் தியானம் செய்வதால் நம்மால் பல சக்திகளை பெற முடியும் என திடமாகக் கூறுகிறார். இவர் கூறியது போல நாமும் முயற்சித்து பார்த்தால் இதில் உள்ள உண்மைகள் விளங்கும்.