இழந்த செல்வம், சொத்து, புகழ், பொருட்கள் முதலானவற்றை திரும்ப பெற செய்ய வேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரங்கள் என்ன?

kuthu-vilakku-cash

நாம் என்னதான் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் தான் உழைத்த பணம் நம்மிடம் நிலைக்கும். ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற பழமொழி தான் இப்போது நினைவுக்கு வருகிறது. ‘நுங்கு எடுப்பவன் ஒருவன், அதை நோன்டி தின்பவன் இன்னொருவன்’ என்பதற்கு ஏற்ப நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பெயர், புகழ், சொத்துக்கள், பொருட்கள், செல்வங்கள் இன்னொருவர் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அதனை பார்க்கும் போது வயிற்றெரிச்சலாக இருக்கும். ஆனால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது போய்விடும். இது போன்ற சமயத்தில் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

kala-bairavar

கடன் தொல்லை நீங்கவும், இழந்த செல்வத்தை மீட்கவும் முதலில் செய்ய வேண்டிய பரிகாரம் பைரவரை வழிபடுவது தான். பைரவருக்கு விசேஷமான தேய்பிறையில் வரும் அஷ்டமி அன்று அவருடைய சன்னிதியில் மிளகு தீபம் ஏற்றி வர இழந்த செல்வங்கள் யாவும் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

பரம் பொருளாக விளங்கும் ஏழுமலையானுக்கே திருமணத்திற்கு கடன் கொடுத்தவர் குபேரன். அத்தகைய குபேரன் சாபம் பெற்று ஒரு முறை நாடு, நகரம் எல்லாம் இழந்தான். அவர்களிடம் இருந்த அத்தனை செல்வங்களும் பறிபோய் நின்ற பொழுது, அவர் மகாலட்சுமியை வணங்கினார். லட்சுமியின் ஸ்வரூபமாக விளங்கும் நெல்லி மரத்தை நட்டு வளர்த்தார். நெல்லி மரம் செழிப்பாக வளர வளர இழந்த செல்வங்கள் மீண்டும் நம்மிடமே வரும். மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமை தோறும் நெல்லிக்கனி படைத்து வணங்கி வருவதற்கு பலனாக இழந்தவற்றை மீட்கலாம்.

nelli-maram1

இழந்த செல்வம், சொத்துக்கள், பெயர், புகழ் அத்தனையும் திரும்ப கிடைக்க வராகி அம்மனை வழிபடலாம். இதுவரை கஷ்டப்பட்டு நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் திடீரென ஏதாவது ஒரு சூழ்ச்சியின் காரணமாக தன் பெயரைக் கெடுத்துக் கொண்டு அவமானப்பட்டு நிற்பார்கள். பெயரும், புகழும் பறிபோவது என்பது உயிரை விடுவதற்கு சமம் ஆகும் என்று நினைப்பார்கள். சூழ்ச்சியினால் பறி போன இவைகள் திரும்ப கிடைக்க வராகி அம்மனை சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதை எப்படி செய்யலாம்?

காலையில் வராகி அம்மனுக்கு புதிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். ஒரு கருநீல துணியை சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வெண்கடுகை சேர்த்து முடிந்து கொள்ள வேண்டும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்ற செய்வது போல், இதனை செய்வது உத்தமம். இதனை நல்லெண்ணெயில் தோய்த்து தீபம் ஏற்றி வராகி அம்மனுக்கு காண்பித்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். எண்ணெயில் வெண்கடுகு படபடவென பொரிந்து முடித்ததும் உங்களுடைய பிரச்சனைகளும் தீர்ந்து விட்டிருக்கும். அதிக சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை 8 சனிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த செல்வங்கள், நாடு, நகரங்கள் அத்தனையும் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

varahi

இந்த எளிய பரிகாரங்களை நீங்கள் தொடர்ந்து செய்து வர நிச்சயமாக இழந்தவற்றை இழந்தபடியே திரும்ப பெறலாம். இவற்றில் ஒன்றை மட்டும் செய்துவிட்டு விட்டு விடாதீர்கள். இவைகள் அத்தனையும் இழந்த செல்வத்தை மீட்பதற்கான பரிகாரங்கள் ஆகும். ஒவ்வொன்றையும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும்.