பளபளன்னு பளிங்குகல் போல முகத்தை ஜொலிக்க வைக்க பலாக்கொட்டை ஃபேஸ் பேக்.

face
- Advertisement -

சிறு வயதிலேயே உங்களுக்கு முதுமையான தோற்றம் வராமல் இருக்க, முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க, கை கால்களில் இருக்கும் சுருக்கங்களை நீக்க, முகச் சுருக்கத்தைப் போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணலாம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் இளமையாக தான் இருக்கின்றேன் அழகாகத்தான் இருக்கின்றேன் என்பவர்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். உங்களுடைய அழகு நீண்ட நாட்களுக்கு நிலைக்கும். இதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டாம். பலா பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே இருக்கும் கொட்டையை இந்த அழகு குறிப்புக்காக நாம் பயன்படுத்த போகின்றோம். கடைகளில் பலாக்கொட்டை என்று கேட்டால் கூட தருவார்கள். அதை நீங்கள் வாங்கி கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் இந்த பலா கொட்டை பொடி விற்கின்றது. அதாவது jackfruit seed powder என்று போட்டால் உங்களுக்கு வரும். அந்த பொடியை வாங்கி கூட குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான அளவு பலாக்கொட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 10 லிருந்து 15 பலாக்கொட்டைகள் எடுத்து அதன் மேலே இருக்கும் தோலை நீக்கிவிட்டு, சிறிது நேரம் அதை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பலாக்கொட்டையை பச்சையாக அரைக்கும் போது அவ்வளவு நைசாக அறியாது. முடிந்தவரை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பலாக்கொட்டையை ஒரு ஃபில்டரில் ஊற்றியோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஊற்றியோ நன்றாக பிழிந்தால் உங்களுக்கு பலாக்கொட்டையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு கிடைக்கும்.

- Advertisement -

இந்த சாரோடு கொஞ்சமாக தேன் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த சாறை அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து அப்ளை செய்ய வேண்டும். இது கொஞ்சம் தண்ணீராக இருப்பதால் இரண்டு மூன்று முறை கோட்டிங் போல உங்கள் முகத்தில் தடவ வேண்டும். ஒரு முறை இந்த சாறை முகத்தில் தடவி, இரண்டு மூன்று நிமிடங்கள் காய விட வேண்டும். காய்ந்த பிறகு மீண்டும் இந்த சாறை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவி உலர விட வேண்டும். இதே போலத்தான் உங்களுடைய கை, கால்களுக்கும் இதை தடவி நன்றாக உலர விட்டு 20 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் சருமத்தை கழுவி விட்டால் உங்களுடைய சருமம் பொலிவாக இருக்கும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம்.

இதே பலாப்பழ சாறில் கோதுமை மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்து கலந்தால் நமக்கு ஒரு ஃபேஸ் பேக் கிடைத்துவிடும். அந்த பேக்கை கூட நீங்கள் உங்களுடைய முகம் கை கால்களில் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளலாம். இது ஒரு முறை.

- Advertisement -

ஒருவேளை நீங்கள் இந்த பலாபழக் கொட்டையை பொடியாக ஆன்லைனில் இருந்து வாங்கினால், அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து ஃபேஷ்பேக்காக தயார் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பால், தேன், சேர்த்து கலந்து ஃபேஸ் பேக்காக தயார் செய்து கொள்ளலாம். அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி கூட அதை ஃபேஸ் பேக்காக கலந்து பயன்படுத்தி கொள்ளலாம். பலாக்கொட்டை பொடியோடு எந்த பொருளை சேர்த்து கலக்க வேண்டும் என்பது உங்களுடைய விருப்பம் தான்.

வயதான தோற்றத்தை தள்ளி போட இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகுக்கு மேலும் அழகு சேர்க்க பலாக்கொட்டை ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும்.

- Advertisement -