பணம் கட்ட இயலாத நிலையில் உயிருக்கு போராடும் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் – வைரலாகும் பகிர்வு

jacob 2

கிரிக்கெட் என்றாலே பணம் கொட்டும் விளையாட்டு என்ற எண்ணம் இந்தியா மட்டும் அல்ல உலகநாடுகள் முழுக்க உள்ளது. தேசிய அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் போதுமான அளவிற்கு சம்பாதித்து விடுவார்கள். அவர்களுக்கான போட்டி ஊதியம் மற்றும் அவர்களது ஓய்வுக்கு பின் ஓய்வுஊதியம் என அனைத்தும் அதிகம் தான்.

jacob 1

ஆனால், ரஞ்சி போட்டிகள் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் பெரும் சம்பளத்தொகை அவர்களது பயிற்சி காலத்திற்கு ,மட்டுமே போதுமான அளவு இருக்கும். அதன் பின்னர் அவர்களது வாழ்க்கைக்கு தேவையான பணம் கிடைக்குமா என்றால் அதற்கு நாம் பதிலளிக்க இயலாத ஒன்றாக தான் அது இருக்கும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜேகப் மார்ட்டின் என்பவர் இந்திய அணிக்காக 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். அவர் சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக பலத்த காயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

jacob 2

தினமும் சிகிச்சைக்காக 70ஆயிரம் ருபாய் வேண்டு என்ற நிலையில் அவரது குடும்பத்தாரால் அவ்வளவு பணம் கட்ட இயலாத நிலையில் அவர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இவரது தலைமையின் கீழ்த்தான் இந்திய அணியின் வீரரான யூசுப் பதான் ரஞ்சி போட்டிகளில் பரோடா அணிக்காக அறிமுகம் ஆனார் என்பது குறிபிடித்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தி வைரலாக பரவுகிறது. உங்களால் முடிந்தால் அவருக்கு பண உதவி கிடைக்கும்வரை நீங்களும் ஷேர் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே :

இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது பிராட்மேன் அளவிற்கு புகழுடன் ஓய்வு பெறுவார் – இயான் சேப்பல் கணிப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்