இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது பிராட்மேன் அளவிற்கு புகழுடன் ஓய்வு பெறுவார் – இயான் சேப்பல் கணிப்பு

vk-msd

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

msd

தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்காக நியூசிலாந்து சேயென்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வருடம் நடைபெறஉள்ள உலகக்கோப்பை தொடரை இந்திய அணியே கைப்பற்றும் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வர தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் கோலி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இயான் சேப்பல் கூறியதாவது : கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் வேற லெவலில் உள்ளது. மேலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் அவரால் தொடர்ந்து ரன்களும் மற்றும் சதத்தினையும் குவிக்க முடிகிறது. இன்றைய தேதியில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் நான் நிச்சயம் கோலி என்றே கூறுவேன்.

kohli

மேலும், கோலி தனது கிரிக்கெட் வாழ்வினை முடிக்கும்போது சச்சினின் சாதனைகள் பலவற்றை முடிப்பார். இனிவரும் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய் அவரது கிரிக்கெட் கேரியர் அமையும். மேலும், பிராட்மேன்,சச்சின் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் எப்படி தங்களது கிரிக்கெட் வாழ்வினை சிறப்பாக முடித்தார்களோ அதேபோல் பெரும்புகழுடன் கோலி தனது கிரிக்கெட் வாழ்வினை முடிப்பார் என்றே நான் கருதுகிறேன் என்று இயான் சேப்பல் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

அனைத்து திறமைகளும் இருந்தும் அணியில் என்னை நிராகரிப்பது வேதனை அளிக்கிறது – இந்திய அணியின் இளம்வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்