தனது ஸ்டைலில் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பதிலளித்த ஜடேஜா – வைரல் வீடியோ

jaddu-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் ஆட்ட நேர முடிவில் 303 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று விஹாரி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார்.

jaddu

பிறகு பண்ட் மற்றும் புஜாரா நிலைத்து நின்று ஆடினர். புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். ஒருபுறம் பண்ட் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தினை பவுண்டரி அடித்து பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஜடேஜா வழக்கமான பாணியில் நேர்த்தியாக விளையாடி தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார்.

அரைசதத்தினை பூர்த்தி செய்த ஜடேஜா தனது பாணியில் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பேட்டை சுழற்றி தனது சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டார். இந்த கொண்டாட்டமும் விடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

தற்போது இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. 159* ரன்களுடன் பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.

இதையும் படிக்கலாமே :

சதமடித்த பிறகு இந்திய வீரர் அடித்த சமர்சால்ட் (பல்டி )- வைரலாகும் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்