சதமடித்த பிறகு இந்திய வீரர் அடித்த சமர்சால்ட் (பல்டி )- வைரலாகும் வீடியோ

pant-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல நாள் ஆட்ட நேர முடிவில் 303 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று விஹாரி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார்.

pant

பிறகு புஜாராவுடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பொறுமையினை மிகவும் சோதித்தது. புஜாரா 193 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு பந்த் சிறிது வேகமாக ஆடி டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார்.

சதமடித்த பிறகு அவர் தேநீர் இடைவெளியில் பல்டி அடித்தவாறு தரையில் இருந்து எழுந்தார். இது வீடியோ பதிவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை இந்திய அணி 574 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 139 ரன்களுடனும், ஜடேஜா 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இதுவரை பெரிய ஸ்கோர் குவித்துள்ளதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது என்றே கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே :

இனிவரும் டெஸ்ட் தொடர்களில் இவர்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரராக இறங்கட்டும் – கம்பீர் விளக்கம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்