இவர் சொல்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு செய்கிறேன் அதுவே என் வெற்றிக்கு காரணம் – கேதார் ஜாதவ்

Jadhav

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Toss

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இதுகுறித்து ஜாதவ் பேசுகையில் : நான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடியதாக கருதுகிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டேன். எனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் தோனி தான். அவரைப்போன்ற ஒருவீரர் எதிர்முனையில் இருந்து ஆடும்போது என்னால் இயல்பாக எனது ஆட்டத்தினை விளையாட முடிகிறது.

dhoni-jadhav

மேலும், களத்தில் அவர் அளிக்கும் குறிப்புக்கள் சிறப்பாக செயல்பட வைக்கின்றன. அதனால் நா அவர் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நம்பி செயல்படுகிறேன். அதற்கு பலனும் நன்றாக அமைவது மகிழ்ச்சியே என்று பேசினார் ஜாதவ்.

இதையும் படிக்கலாமே :

தனது கையில் 16 மொழிகளில் தனது பெயரினை டேட்டூ போட்ட இந்திய வீரர் – ஹர்டிக் பாண்டியா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்