உங்களுக்கு செல்வம் அதிகரிக்க, காரிய வெற்றி கிடைக்க சுலோகம்

hanuman-compressed

செல்வம் என்பது உலகில் வாழும் மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாகும். அந்த செல்வதை ஈட்ட மக்கள் அனைவரும் படாத படு படுகின்றனர். தினந்தோறும் பல வகைகளில் பணம் சம்பாதிக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இப்படி பொருள் சம்பாதிப்பது மட்டுமல்ல வேறு பல விடயங்களிலும் வெற்றி பெற இறைவனின் அனுக்கிரகம் நமக்கு தேவை. அந்த வகையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிகளை பெற உதவும் ” ஜெய் அனுமன் ஸ்லோகம் ” இதோ

Hanuman

ஜெய் அனுமன் ஸ்லோகம்

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத் நக மாருதம்

அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்

ஸ்ரீ ராமரின் தூதனாகிய, அனைத்திலும் வெற்றியை தருகிற ஜெய் அனுமன் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் துதித்து வருவது சிறந்த நன்மைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி, விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை துதிப்பதால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். தேர்வுகள், வேலைவாய்ப்பு நேர்முக தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செல்வம் மற்றும் புகழ் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

Hanuman

- Advertisement -

ஈடுபடும் காரியங்கள் எதுவானாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற துடிப்பு நம்மிடம் இருக்கும். அத்தகைய வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்கவும் செய்கிறோம். பூவுலகில் அனைத்துமே இறைவனின் செயலாக இருக்கும் போது நாம் ஈடுபடுகின்ற செயலின் வெற்றி, தோல்வியும் அந்த இறைவனின் முடிவாகவே இருக்கிறது. பூமியில் திருமால் ராமாவதாரம் எடுத்த போது, அவரின் அர்பணிப்பிற்குரிய சேவகனாக அனுமன் எனப்படும் ஆஞ்சநேயர் இருந்தார். அவரின் இந்த சுலோகம் கூறி வழிபடுவதால் நன்மைகள் நமக்கு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பரசுராமர் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jai hanuman slokam in Tamil. It is also called as Hanuman stuti in Tamil or Anjaneyar slokam in Tamil or Hanuman slokam in Tamil or Hanuman manthirangal in Tamil.