சொந்த மனை, நிலம் சொத்துகளில் ஏற்படும் பிராச்சனைகள் நீங்க மந்திரம் இதோ

parasuramar-compressed

ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே பேராசை என்று கூறும் அளவிற்கு இக்காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது. அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக சிறிது நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த நிலம் சம்பந்தமான சொத்துகளில் உறவினர்கள், எதிரிகள் என அனைவரும் பாக சண்டைக்கு வருகின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் தவிப்பவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ பரசுராமர் மந்திரம்” இதோ.

parsuramar

பரசுராமர் மந்திரம்

ஓம் ராம் ராம் ஓம் ராம் ராம்
ஓம் பரசு ஹஸ்தாய நமஹ

தந்தை சொல் வேதம் என்பதற்கு உதாரணமாக இருந்த ஸ்ரீ பரசுராமர் மந்திரம் இது. அக்கிரமங்களை அழிக்கும் வீரராக இருந்து இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதப்படுபவர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான ஸ்ரீ பரசுராமர். அவருக்குரிய மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று விஷ்ணு ஆலயத்தில் வைத்து 108 முறை தெற்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை துதித்து பின்னர் வீட்டில் வைத்து துதிக்க வேண்டும். இந்த மந்திரம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ,நில அபகரிப்பு பிரச்சனை மற்றும் நிலம் சார்ந்த சொத்து பிரச்சனை,வறுமை, தவறான தொடர்பு இவற்றில் இருந்து விடுதலை தரும்.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஸ்ரீ பரசுராமர். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வராக அவதரித்தவர். சிவன் மீது தீவிர தவமியற்றி, அந்த சிவபெருமானிடமிருந்தே ஆற்றல் வாய்ந்த சிவ மழு எனப்படும் கோடரி ஆயுதத்தை பெற்றவர். தாயை கொள் என்று தந்தை கூறியதும். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தனது தாயின் தலையை கொய்தார். பின்பு தனது தந்தையிடம் தாய் ரேணுகா தேவியை உயிர்பிக்குமாறு கூறி தனது தாயை உயிர்ப்பிக்க செய்தார். பரசுராமரின் இந்த மந்திரம் துதிப்பவர்கள் பல தீமைகளில் இருந்து காக்கப்படுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
நோய்கள் நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Parshuram mantra in Tamil. It is also called Parshuram shloka in Tamil or Parshuram stuti in Tamil or sothu prachanai theera manthiram.