வெளிநாட்டில் இருப்பவர்களின் நோயை வீட்டில் இருந்தபடியே தீர்க்கு பாட்டி – வீடியோ

Jakkamma patti

இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்த அனைவருமே மனிதனாகவே வாழ்ந்து பின்பு மறைகின்றனர். ஆனால் ஒரு சிலர் மனிதனாகப் பிறந்தாலும் அவனின் உண்மையான லட்சியமான முக்திநிலையை அடைவதற்கு பல கடினமான தவ யோகங்கள் செய்து இறுதியில் சித்தர் என்ற நிலையை அடைகின்றனர். அவர்களில் ஆண் மற்றும் பெண் சித்தர்களும் உண்டு. அப்படி தன்னை நாடிவரும் தன்னை நாடிவரும் தன் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் ஒரு பெண் சித்தரைப் பற்றி இங்கு காண்போம்.

விருதுநகர் மாவட்டம், “ராஜபாளையம்” ஊரில் ஒரு சிறிய கோவிலில் தங்கியிருக்கும் இந்த பெண் சித்தர்க்கு வயது “110” என்று கூறப்படுகிறது. இந்த வயதிலும் தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை பரிவோடு கேட்டு அவற்றைப் போக்குகிறார். அப்படி இந்த பெண் சித்தரால் தங்கள் வாழ்வில் பல நன்மைகள் நடந்ததாக இங்கு வருவோர்கள் கூறுகிறார்கள். ஒரு பக்தரின் உறவினருக்கு இந்த பெண் சித்தர் கூறிய தேதியிலேயே,அந்த உறவினரின் மனைவிக்கு குழந்தைப் பிறந்ததாக கூறி அதிசயிக்கிறார் அந்த பக்தர்.

இவரின் அற்புத ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட “பிரான்ஸ்” நாட்டைச் சேர்ந்த சிலர் இவரைத் தேடி இங்கு வந்து, பிரான்ஸ் நாட்டில் வாழும் தங்கள் உறவினர் ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதைப் போக்குமாறும் இவரை வேண்டினர். அதை ஏற்று சிறிது நேரம் தியானத்தில் இருந்ததாகவும், பிறகு இவர்களை பிரான்சில் வாழும் தங்கள் உறவினரை தொலைபேசியில் அழைத்து அவர் உடல்நலனை விசாரிக்குமாறு கூறினார் என்றும், இவர்களும் அவரை விசாரித்த போது தன்னுடைய நோய் தாக்கம் முற்றிலும் நீங்கியதாக பிரான்ஸிலிருக்கும் உறவினர் தெரிவித்தார் என்று இந்நிகழ்வைப் பற்றி இங்கு வருபவர்கள் அதிசயிக்கின்றனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு புற்று நோய் தோன்றியுள்ளதாக அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை எண்ணி அவர் கவலையடைந்து அங்கிருந்தவாரே தொலைபேசியில், இந்த சித்தரை தொடர்பு கொண்டு தன் நோய் தீர்க்குமாறு வேண்டினார். அப்போது இந்த சித்தர் இங்கிருந்தவாறே தன் நோயை நீக்கியதைப் பற்றி அத்தமிழரே விரிவாகக் கூறும் ஒரு காணொளி காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. சித்தர்களால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவையெல்லாம் சான்று.