புது வருடம் முழுவதும் நல்லது நடக்க நவகிரக பரிகாரம்

navagraham
- Advertisement -

இன்று பிறந்திருக்கும் ஆங்கில புத்தாண்டு எல்லோருக்கும் நன்மையை மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் எல்லோருக்கும் சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்து, இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சில பேருக்கு, சில ராசிக்காரர்களுக்கு, இந்த புது வருடம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எது எப்படியாக இருந்தாலும் சரி, இன்றைய நாள் முடிவதற்குள் கூடுமானவரை இந்த பரிகாரத்தை செய்ய பாருங்கள். எளிமையான பரிகாரம்தான். உங்களால் செய்ய முடியக்கூடிய பரிகாரம் தான்.

- Advertisement -

இன்று இந்த பரிகாரத்தை செய்து விட்டால், இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நன்மையே நடக்கும். ஜாதக கட்டத்தில் இருக்கும் நவகிரகங்கள் உங்களுக்கு நல்லதையே செய்யும். இந்த வருடம் இனிமையான வருடமாக அமைய நவக்கிரகங்களின் ஆசியை பெற, செய்ய வேண்டிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

புது வருடம் சந்தோசமாக இருக்க வழிபாடு

வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு இருக்கும் நவகிரக சன்னிதானத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் சிறப்பு. வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இல்லை. மற்ற கோவில்களில் நவகிரக சன்னிதானம் இருக்கிறது, என்பவர்கள் அந்த நவகிரக சன்னிதானத்திற்கு சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

வழக்கம்போல கோவிலில் இருக்கும் முக்கிய தெய்வம் எதுவோ அதை முதலில் வழிபாடு செய்யுங்கள். பிள்ளையார், முருகர், சிவன், பெருமாள், எந்த இறைவன் பிரதானமாக இருக்கிறது. அந்த இறைவனிடம் சென்று வழிபாடு செய்து ஆசீர்வாதம் வாங்குங்கள்.

பிறகு நவகிரக சன்னிதானத்திற்கு வந்து 2 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, ‘இந்த புது வருடத்தில், என்னுடைய ஜாதக கட்டத்தில் கிரஹச்சாரம் எப்படி இருந்தாலும் சரி, வரக்கூடிய கஷ்ட நஷ்டங்கள், இன்ப துன்பங்கள் எல்லாம் எந்த வகையிலும் என் வாழ்க்கையை பாதித்து விடக்கூடாது’ என்று நவகிரக சன்னிதானத்தில் வேண்டுதல் வைத்து அந்த விளக்கை ஏத்திடுங்க.

- Advertisement -

பிறகு கோவிலில் நமஸ்காரம் செய்து சிறிது நேரம் அமர்ந்து, வீடு திரும்பவும். வீடு திரும்பும் போது நவகிரகங்களை மனதில் நினைத்துக் கொண்டு 9 நபர்களுக்கு, உங்கள் கையால் அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பதிவை படித்த பிறகு, நீங்கள் இந்த பரிகாரத்தை இன்று நேரம் கிடைத்தால் செய்யலாம். இன்று இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள் நாளை, அல்லது அதற்கு அடுத்த நாள், மூன்று நாட்களுக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஜனவரி 1 செய்ய வேண்டிய முதல் செலவு, முதல் தானம்

இந்த வருடம் உங்கள் ராசிக்கு நேரம் நன்றாக இருந்தாலும் சரி, அல்லது நேரம் காலம் சரியில்லை என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த வருடம் பெரிய அளவில் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்த வழிபாடு ஒன்றே போதும். இந்த வருட பிறப்பு உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று இறைவனையும், நவகிரகங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -