ஜனவரி 1 செய்ய வேண்டிய முதல் செலவு, முதல் தானம்

cash3
- Advertisement -

இன்று மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம், பண கஷ்டம். இல்லாதவர்கள், இருப்பவர்களிடம் கையேந்த கூடிய நிலைமை. இந்த நிலைமை இந்த புது வருடத்திலாவது மாற வேண்டும். நம்முடைய தேவைக்கு நாம் பணம் சம்பாதிக்க வேண்டும். அடுத்தவர்களிடம் கையேந்தி விடக் கூடிய சூழ்நிலையை அந்த கடவுள் நமக்கு கொடுக்கவே கூடாது. இந்த வருடம் செல்வ செழிப்போடு ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

நாளைய தினம் புது வருடம் பிறக்கவிருக்கின்றது. இந்த புது வருடத்தில் நம்முடைய செல்வ செழிப்பு பல மடங்காக அதிகரிக்கவும், கடன் சுமை குறையவும், செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். ஜனவரி ஒன்றாம் தேதி நீங்கள் செய்யக்கூடிய முதல் செலவு இந்த பொருளை வாங்குவதற்காக இருக்கட்டும். அதேசமயம் நீங்கள் வாங்கிய அந்த பொருளை நீங்களே வைத்து பயன்படுத்தாதீர்கள். அதை யாருக்காவது தானமாக கொடுங்கள்.

- Advertisement -

ஜனவரி 1 செய்ய வேண்டிய முதல் தானம்

ஜனவரி ஒன்றாம் தேதி முதன்முதலாக காசு கொடுத்து நீங்கள் வாங்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன. அந்த பொருளை யாருக்கு எப்படி தானம் கொடுப்பது தெரிந்து கொள்வோமா. செல்வ செழிப்பு என்றாலே மகாலட்சுமி. மகாலட்சுமி என்றாலே பசு. பசுவில் இருந்து எடுக்கப்பட்ட பசு நெய், அல்லது பசும்பால்.

இந்த இரண்டில் ஏதாவது ஒரு பொருளை நீங்கள் ஜனவரி முதல் நாள், காலையில் வாங்க வேண்டும். ஜனவரி முதல் நாள் நீங்கள் செலவு செய்யக்கூடிய பணத்தில் இந்த இரண்டு பொருளை வாங்குங்க. பெரும்பாலும் காபி டீ போட பால் வாங்கும் பழக்கம் இருக்கும். ஜனனி 1 ஒன்றாம் தேதி காலை பணம் கொடுத்து பசும்பாலை வாங்குங்க.

- Advertisement -

பாக்கெட் பால் வாங்குவது கணக்கு கிடையாது. பசும்பால் வாங்க வேண்டும். வாங்கிய பசும்பாலை முதலில் என்ன செய்யணும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுக்கலாம். இது ஆன்மீகத்தில் நமக்கு மன நிம்மதியையும், பலனையும் கொடுக்கும்.

அப்படி இல்லையா இன்னும் பல மடங்கு உங்களுக்கு பலன் கிடைக்க வேண்டுமா. ஏதாவது ஆசிரமங்கள் இருக்கும். குழந்தைகள் வாழக்கூடிய ஆசிரமம். அந்த ஆசிரமத்திற்கு இந்த பசும்பாலை வாங்கி தானமாக கொடுங்கள். உங்களுக்கு வசதி வாய்ப்பு இருந்தால் அன்று 5 லிட்டர் அளவு பசும்பாலை வாங்கி கூட குழந்தைகள் ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம்.

- Advertisement -

முடியவில்லை உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் ஏழை குழந்தைக்கு அரை ஏக்கர் பசும்பால் வாங்கி தானம் கொடுங்கள். அங்கு குழந்தைகள் அந்த பசும்பாலை காய்சி சர்க்கரை போட்டு குடிக்க பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையென்றால் ஜனவரி முதல் நாள் அந்த பசும்பாலில் பால் பாயாசம் செய்து கூட நீங்கள் தானம் கொடுக்கலாம் தவறு கிடையாது குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் ஆசிரமத்திற்கு.

அடுத்தபடியாக சொல்லப்பட்ட பொருள் பசு நெய். பசு நெய் வாங்கி கோவிலுக்கு தீபம் ஏற்ற தானம் கொடுக்கலாம். ஆன்மீக ரீதியாக இந்த தானம் உங்களுக்கு செல்வ செழிப்பை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் இந்த பசு நெயை வாங்கி மேல் சொன்னதைப் போல குழந்தைகள் இருக்கும் அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கு தானம் கொடுங்கள்.

அவர்கள் அதை சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு கொள்வார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கக்கூடிய பொருட்களில் பசும்பாலும் நெய்யும் அடங்கும். அது கிடைக்காத குழந்தைகள் எவ்வளவு பேர் இருக்காங்க. அவர்கள் பயனடையும்படி நாளைய தினம் உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த இரண்டு பொருட்களை வாங்க காசு செலவு செய்யுங்க.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு புத்தாண்டு அன்று பார்க்க வேண்டியது

வாங்கிய பொருளை தானமும் செய்யுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் நிறைய பணத்தைக் கொடுப்பார். நிறைய வசதியை கொடுப்பார். அடுத்த வருடத்திற்குள் உங்களுடைய வளர்ச்சியை கண்டு ஊரே மெய்சிலிர்க்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -