தொழிலில் வெற்றி பெறவும், ஜனவசியம் ஏற்படவும் பரிகாரம்

jana vasiyam
- Advertisement -

பிறரிடம் கைகட்டி வேலை செய்யக்கூடாது என்ற எண்ணத்திலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற ஆசையிலும் பல பேர் சொந்தமாக தொழில் செய்வார்கள். சிலரோ சொந்தமாக கடை வைத்து அந்த கடையை பார்த்துக் கொள்வார்கள். இப்படி எதுவாக இருந்தாலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தங்களின் தொழிலை திறமையாகவும், வெற்றிகரமாகவும் செய்வதற்கு செய்யக்கூடிய எளிய தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்பது சுலபமான செயல் கிடையாது. அதற்கு அந்த தொழில் சம்பந்தப்பட்ட அறிவு வேண்டும். அந்த தொழிலில் முதலீடு செய்வதற்கு பணம் வேண்டும். அந்த தொழிலை திறமையாக செயலாற்றுவதற்கு பக்கபலமாக பலரின் உதவிகளும் தேவைப்படும். இவை அனைத்தையும் தாண்டி அந்த தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த தொழிலை சிறப்பாக நாம் செய்வதற்கு நமக்கு வாடிக்கையாளர்கள் கண்டிப்பான முறையில் வேண்டும்.

- Advertisement -

அந்த வாடிக்கையாளர்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் தான் ஜனவசியம். ஜன வசியம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தொழிலில் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித குறையும் இருக்காது. அப்படிப்பட்ட ஜனவசியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீப பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக எந்த ஒரு பரிகாரத்தையோ அல்லது வழிபாட்டையோ நாம் மேற்கொள்ளும் பொழுது அதில் கண்டிப்பாக முறையில் தீபம் என்பது இருக்கும். ஒவ்வொரு பரிகாரத்திற்கும் ஒவ்வொரு வகையான தீபங்களை ஏற்றுவோம்.

எந்த எண்ணெயை பயன்படுத்தி ஏற்ற வேண்டும், எந்த திரி போட்டு ஏற்ற வேண்டும் என்றெல்லாம் இருக்கிறது. அந்த வகையில் ஜன வசியத்தை ஏற்படுத்துவதற்கு எந்த தீபத்தை எந்த இடத்தில் எப்படி ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு இரண்டு அகல் விளக்கு வேண்டும். மேலும் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நாம் கடுகு எண்ணையை தான் பயன்படுத்த வேண்டும். எந்த திரியை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தொழில் செய்யும் இடம் அல்லது கடையின் வாசலில் அகலை வைத்து கடுகு எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது அந்த தீபம் எறிய வேண்டும். பிறகு மறுநாள் காலையில் இந்த அகலில் மீதம் இருக்கும் கடுகு எண்ணெயை அருகில் இருக்கும் அரச மரத்தடியில் ஊற்றி விட வேண்டும்.

அன்று மாலை மறுபடியும் புதிதாக எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் செய்து வர கடுகு எண்ணெயின் அற்புதமான ஆற்றலால் ஜனவசியம் ஏற்பட்டு தொழிலும், வியாபாரமும் லாபகரமாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார பிரச்சனை தீர பரிகாரம்

எளிமையான இந்த தீப பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வருபவர்களின் வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அபரிவிதமாக இருக்கும்.

- Advertisement -