அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நியூசி அதிரடி வீரர். பயிற்சியாளராக விருப்பம்

mccullum

நியூசிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 தொடர் நடைபெற உள்ளது. இதனால், இரு அணிகளும் தீவிர வாய்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

brendon 1

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான ப்ரெண்டன் மெக்குல்லம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். ஏற்கனவே, நியூசிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் உலகின் பல்வேறு இடங்களில் நாடாகும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்த இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த பிக் பேஷ் தொடரில் விளையாடி வந்தார்.

brendon

தற்போது அதிலிருந்தும் தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். மேலும், ஓய்வினை தொடர்ந்து தான் கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்து செய்ய ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, அதிரடி வீரரான இவரை விரைவில் பயிற்சியாளராக பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே :

இதெல்லாம் எனது வெற்றிக்கு தடையல்ல. சச்சின், பிராட்மேன் போன்றவர்களும் இதனை கடந்தது தான் சாதித்தார்கள் – அஸ்வின் ஆதங்கம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்