ஜோதிடம் : 12 வீடுகளில் குரு இருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

Guru Baghavan

குரு பார்க்க கோடி நன்மை என்றொரு பழமொழி உண்டு. ஜோதிட சாஸ்திர படி முழுமையான சுபகிரகம் என கூறப்படும் கிரகம் குரு பகவான் ஆவார். ஜாதகத்தில் மற்ற எந்த கிரகங்களையும் விட குரு கிரகம் நல்ல நிலையில் இருக்குமானால் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். அந்த வகையில் குரு ஜாதகத்தில் 12 வீடுகளிலும் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru

 

குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயு­ளுடன் இருப்­பார்கள். சிறந்த மனைவி அமையும். இவ­ருடன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­வர்கள் நல்ல ஆன்­மி­க­வா­தி­க­ளாக இருப்­பார்கள். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். பூர்வ புண்­ணிய பாக்­கியம் கிடைக்கும். இவர்­களின் குழந்­தைகள் சிறந்து விளங்­கு­வார்கள். வாழ்க்­கையில் இவர் நல்ல முன்­னேற்றம் காண்­பார். தந்தை இவ­ருக்கு உதவி புரிவார்.

குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் வாக்­குக்கு சமு­தா­யத்தில் மதிப்பு இருக்கும். கல்­வியில் சிறந்து விளங்­கு­வார்கள். குடும்­பத்தில் நிம்­மதி இருக்கும். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். கையி­ருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியா­பா­ரத்தில் சிறந்து விளங்­கு­வார்கள். இவ­ருடன் சேரும் வியா­பார நண்­பர்­களும் நல்ல முறையில் இருப்­பார்கள்.

Guru Baghavan

- Advertisement -

குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்­தியில் ஈடு­பாடு இருக்கும் இளைய சகோ­தரருக்­கு நல்ல முன்­னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவ­ருக்கு நன்மை கிடைக்கும். எதிர்­பா­லி­ன­ரிடம் மோகம் இருக்கும். அள­வோ­டுதான் மகிழ்ச்சி இருக்கும். குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்­துடன் இருப்பார். குழந்தை பாக்­கியம் தாம­த­மாக இருக்கும். குழந்­தைகள் மூலம் நல்ல விஷ­யங்கள் நடக்­காது. பகை­வர்களை உண்­டா­கு­வார்கள். விவ­சாய சம்­பந்­த­பட்ட குடும்­ப­மாக இருந்தால் விவ­சாயம் மூலம் நல்ல வரு­மானம் இருக்கும்.

guru-bagawan

குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்­தி­ர­பாக்­கியம் கிடைக்கும். புத்­தி­ரர்­களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்­ணிய அறிவு இருக்கும். குல­தெய்­வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பண­வ­ர­வுகள் இருக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகை­வரை வெற்றி கொள்­ளலாம். சமு­தா­யத்தில் மதிப்பு இருக்­காது. குழந்தை பாக்­கியத்தில் தடையை ஏற்­ப­டுத்­துவார். மங்­க­ள­க­ர­மான நிகழ்ச்­சிகள் நடை­பெற தாமதமாகும். உடம்பு பலம் இழந்து காணப்­படும்.

guru bagwan

குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்­கி­னத்தை பார்ப்­பதால் உடல் நிலை நன்­றாக இருக்கும். சமு­தா­யத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனை­வி­யாக வரு­பவர் ஆன்­மிக சம்­பந்­தப்­பட்ட குடும்­ப­மாக இருக்கும். மனை­வியும் ஆன்­மிக விஷ­யங்­களில் நாட்டம் உள்­ள­வ­ராக இருப்பார். இவர்­க­ளிடம் தொடர்பு வைத்தி­ருப்­ப­வர்கள் நல்ல மத­கு­ரு­மார்­க­ளாக இருக்க வாய்ப்பு உண்டு. குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமை­வது கஷ்­ட­மாக இருக்கும். திரு­மணம் முடிந்தால் மனை­வியின் உடல்­நிலை பாதிக்­கப்­படும். செல்வ நிலை இருக்கும். சோதி­டத்­து­றையில் நல்ல அறிவு ஏற்­படும். மரண வீட்டை குறிப்­பதால் உயிர் வதை இல்­லாமல் உடனே போகும்.

guru

குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்­கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பத­வியில் இருப்பார். ஆன்­மி­கத்தில் சிறந்து விளங்­குவார். மிகப்­பெ­ரிய மடா­தி­ப­தி­களின் தொடர்பு ஏற்­படும். மிக உயர்ந்த படிப்­புகள் எல்லாம் படிப்­பார்கள். வெளி­நா­டுகள் செல்ல வைப்பார். வெளி­நாட்டு தொடர்பு மூலம் பண­வ­ர­வுகள் இருக்கும். குல­தெய்வ அருள் இருக்கும். மந்­திர வித்தை நன்­றாக இருக்கும். குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அர­சாங்­கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்­றிய வட்­டா­ரங்­களில் மதிப்பு இருக்கும். வரு­மா­னத்தை பெருக்­குவார். கோவில் சம்­பந்­தப்­பட்ட இடங்­களில் வேலைக்கு அமர்த்­துவார்.

Guru baghavan

குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வரு­மானம் இருக்கும். மூத்த சகோ­தர சகோ­த­ரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்­பர்கள் அமை­வார்கள். வாகன வச­திகள் ஏற்­படும். எந்த வேலையை எடுத்­தாலும் வரு­மா­னத்­திற்கு குறைவு இருக்­காது. குழந்தை பாக்­கியம் இருக்கும். குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்­கத்தை கடை­பி­டிக்க மாட்டார். புண்­ணிய இடங்­க­ளுக்கு அடிக்­கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்­கி­யத்தில் குறை இருக்கும். சில பேர் பக்­தி­மான்கள் போல் நடிப்­பார்கள். கோவில் கட்­டுதல், ஆறு குளம் வெட்­டுதல் போன்­ற­வற்றில் ஈடு­பட வைப்பார். பண­ வி­ரையம் ஏற்­படும்.

English overview:
Here we have Jathagathil guru in Tamil. It is also called as Guru bhagavan palangal in Tamil or Guru bhagavan in Tamil or Guru tharum palangal in Tamil or Jathagam guru in Tamil.