ஜோதிடம் : 12 வீடுகள் ஒவ்வொன்றிலும் கேது இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ

kethu

ஜோதிடத்தில் நவகிரகங்கள் இருப்பது என கூறப்பட்டாலும் இதில் இருக்கும் ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்களாக இருக்கின்றன, இந்த ராகு கேது கிரகங்கள் மற்ற கிரகங்களை காட்டிலும் வலிமை வாய்ந்த கிரகங்களாக இந்த இரண்டு கிரகங்கள் இருக்கின்றன. இதில் கேது கிரகத்தை ஞான காரகன், மோட்ச காரகன் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த கேது ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்தால் எத்தகைய பலன்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

லக்னம் எனப்படும் முதல் வீட்டிலேயே கேது இருந்தால் அந்த ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பார். பொதுவாக அமைதியானவனாகவும், காரியவாதியாகவும் ஜாதகர் இருப்பார். மற்றவர்களுக்கு தெரியாத விடயங்களையும் இந்த ஜாதகர் அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருந்தாலும் ஞானம் அதிகமிருக்கும். மற்றவர்களுடன் எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்களாக இந்த ஜாதகர் இருப்பார்.

லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் அதிகம் பேசிக்கொண்டே இருப்பார். கல்வியை பாதியில் நிறுத்தியவராகவோ அல்லது படிக்காதவராகவோ இருக்க கூடும். குறுகிய எண்ணங்களை கொண்டவராக ஜாதகர் இருக்கக்கூடும். மற்றவருக்கு உரிமையானவற்றின் மீது ஆசை கொண்டவராக இருப்பார். இந்த ஜாதகருக்கு 32 வயதிற்கு மேல்தான் குடும்ப வாழ்க்கை ஏற்படும்

Astrology ketu

லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவராக இருப்பார். இவரின் குடும்பம் செல்வச்செழிப்பு நிறைந்ததாகவும், மதிப்பு மிகுந்ததாகவும் இருக்கும். ஜாதகருக்கு தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். மிகுந்த தைரியசாலியாக இருப்பார். எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒழிக்கும் பராக்கிரமசாலியாக இருப்பார். செல்வ வளம் பெறக்கூடியவனாகவும், எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக்கூடியவனாகவும் இருப்பார்.

- Advertisement -

லக்னத்திற்கு நான்காம் வீட்டில் கேது இருந்தால் கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. எனினும் இந்த வீட்டின் மீது சுப கிரக பார்வை இருக்கும் போது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இந்த ஜாதகருக்கு நெருங்கிய உறவுகளே பகைவர்களாக மாறும் நிலை உருவாகும்.ஒரு சிலருக்கு தாயன்பு என்பதை அறியாத நிலை ஏற்படும்.

லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் மற்றவர்களுடன் எதிலும் ஒத்துப்போக முடியாதவராக இருப்பார்.திருமணமான சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. அடிக்கடி அஜீரணக்கோளாறுகளால் பாதிக்கப்படுவார். வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. இத்தகைய ஜாதக அமைப்பை சந்நியாச யோகம் என சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இந்த ஐந்தாம் இடத்தில் இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகம் உண்டாகும்.

kethu

லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் அவர் வசிக்கும் இடத்தின் அல் லது அவர் சார்ந்த சமூகத்தின் தலைவனாக இருக்க கூடும். சிறப்பான உயர்கல்வி பெற்றிருப்பார். தர்ம செயல்களில் அதிக ஈடுபாடு உடையவனாக இருப்பார். பல் துறை அறிவு கொண்டவராக இருப்பார். கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இந்த ஆறாம் இடமாகும்.

லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு அவருடைய வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி ஏதும் உண்டாகாது. இழிவான செயல்கள் புரியும் பெண்களுடன் ஜாதகருக்கு நெருக்கம் ஏற்படும். வாழ்க்கையில் வளமை என்பது இருக்காது. அடிக்கடி பிரச்சினைகளில் ஈடுபடுபவராக இருப்பார். தொலைதூர பயணங்களில் ஆர்வமுள்ளவனாக ஜாதகர் இருப்பார். இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோயாளி மனைவி அல்லது கணவன் அமையும் நிலை ஏற்படும்.

லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் அதீத புத்திசாலியாக இருப்பார். மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடிய திறன் கொண்டவராவார். அதே நேரம் சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். எட்டில் கேது இருந்தால் ஆயுள் தோஷம் என்பதால் ஒரு சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழும் நிலை உண்டாகும்.

rahu-ketu

லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் பல பாவச்செயல்களைச் துணிந்து செய்யகூடியவனாக இருப்பார். இதில் சிலருக்கு பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காத நிலை ஏற்படும். காம இச்சைகள் அதிகம் கொண்டவராக இருக்கக்கூடும். உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில் ஜாதகர் ஆர்வமுடையவனாக செயல்படுவார்.

லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகர் மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் கொண்டவராக இருப்பார். சமூகத்தில் மிகப்பெரும் நிலைக்கு ஜாதகன் உயர்வார். ஏழைகளுக்கு அன்னதானம், பிறருக்கு சேவை புரிவதில் ஆர்வம் கொண்டவராக ஜாதகர் இருப்பார். தொழிகளில் நுட்பம் அறிந்தவராக இருப்பார். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்தது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Rahu Ketu

பதினொன்றாம் வீட்டில் கேது இருந்தால் ஜாதகன் மிகவும் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு தனது திறமையால் உயர்வான். அதிகம் படித்த பண்டிதனாக ஜாதகர் இருப்பார். எப்போதும் மகிழ்ச்சியில் திளைப்பவனாக ஜாதகர் இருப்பார். பல நல்ல குணாம்சங்கள் ஜாதகருக்கு இருக்கும். பெருந்தன்மையும், நல்ல தன்னுடைய செயல்களால் பலரிடமும் நன்மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்.

லக்னத்திற்கு பன்னிரெண்டாம் வீட்டில் கேது இருந்தால் இந்த இடத்தில் கேது இருந்தால் அவர் சித்தராகவும், ஞானியாகவும் இருக்க கூடும். இவர்கள் தனிமையை விரும்புவார்கள். ஒரு சிலர் தனிமைப்பட்டும் வாழ்வார்கள். இந்த ஜாதகருக்கு அடுத்த பிறவி என்பதே கிடையாது. முக்தி வீடு பேற்றை இ ந்த ஜாதகர் அடைந்து விடுவார் என்று பழைய ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வாழ்க்கை துணை பற்றி ஜோதிடம் கூறுவது என்ன

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jathagathil ketu in Tamil. It is also called as 12 lagna jothidam in Tamil or Kethu palangal in Tamil or Jothidam kethu palan in Tamil.