ஜோதிடம்: உங்கள் வாழ்கை துணை பற்றி ஜோதிடம் கூறுவது என்ன தெரியுமா ?

marriage

பெண் இல்லாமல் ஆணின் வாழ்க்கை வீண், ஆண் இல்லாமல் பெண்ணின் வாழ்க்கை வீண் என்பது அனுபவசாலிகள் பலரின் வாக்கு ஆகும். நமது பழமையான இலக்கியங்கள் அனைத்துமே ஆண் – பெண் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையை சிறப்பித்து கூறியிருக்கின்றன. திருமணம் செய்யும் போது பலரும் ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றி திருமணம் செய்கின்றனர். ஒருவருக்கு அமைய கூடிய வாழ்க்கை துணை பற்றி ஜோதிட சாஸ்திரம் கூறுவதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

astro wheel 1

திருமணம் செய்து கொள்ளும் வயதில் இருக்கும் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களுக்கு வர போகிற வாழ்க்கை துணை குறித்து பல்வேறு கற்பனைகள் இருப்பது யதார்த்தமானது தான். ஆனாலும் எந்த ஒரு மனிதருக்கும் அவரின் முன்வினை பயன்களுக்கு ஏற்ப அமையும் ஜாதக அமைப்பு தான் அவர்களின் வாழ்வில் திருமண பந்தத்தையும் தீர்மானிக்கின்றன. அதில் சில வகையான கிரக சேர்க்கைகள் இல்வாழ்க்கை துணை விடயத்தில் தரும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாவதாக இருக்கும் வீடு அந்த ஜாதகரின் வாழ்க்கை துணையை பற்றி கூறும் வீடாக இருக்கிறது. இந்த ஏழாவது வீட்டில் சுப கிரகங்கள் இருப்பதும், அந்த சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுவதும் அல்லது மற்ற சுப கிரகங்களின் பார்வை பெறுவதும் இல்லற வாழ்வில் நன்மையான பலன்களை தரும். இந்த ஏழாவது வீட்டில் பாப கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

Hindu Marriage

பொதுவாக எந்த ஒரு வீட்டிலும் பாப கிரகங்கள் இருந்தாலும் அதற்கேற்ற பாதக பலன்களை நாம் அனுபவிக்க நேரிடும், அதிலும் இல்லற வாழ்க்கையை தீர்மானிக்கும் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் எனப்படும் சுக போக கிரகத்தோடு, உக்கிர தன்மை கொண்ட செவ்வாய் எனும் பாப கிரகம் சேர்ந்தாலும் அல்லது அந்த 7 ஆவது வீட்டின் மீது சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் பார்வை பட்டாலும் அந்த ஜாதகர் வாழ்க்கை துணையை இழந்த, பிரிந்த, விலகி சென்ற மற்றும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நின்று போன நபரையே வாழ்க்கை துணையாக ஏற்கும் நிலை ஏற்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
வேலை, தொழில் பற்றி கூறும் கிரகங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sukran sevvai palangal in Tamil. It is also called as Thirumana valkai jothidam in Tamil or Jathagam palangal in Tamil or Jothidam thirumanam palan in Tamil or Vazhkai thunai eppadi amaiyum in Tamil.