அடை செய்ய இனி பருப்புயெல்லாம் தேவையே இல்ல, ஜவ்வரிசி இருந்தா போதும் அத வச்சு ரொம்ப சிம்பிளா இந்த அடை செய்திடலாம். ரொம்ப சூப்பரா, டேஸ்ட் வேற லெவெல்ல இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அடை என்றாலே பருப்பு சேர்த்து தான் செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பருப்பு ஏதும் சேர்க்காமல் வெறும் ஜவ்வரிசி மட்டுமே வைத்து செய்யும் இந்த அடை ருசியில் மிகவும் பிரமாதமாக இருக்கும். அது மட்டுமின்றி ஜவ்வரிசி உடலுக்கு மிகவும் நல்லதும் கூட. ஜவ்வரிசி அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உடல் சோர்வு போன்றவை கூட நீங்கி விடும். ஜவ்வரிசி அடை ரெசிப்பியை எப்படி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 200 கிராம், பொட்டு கடலை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன், வேக வைத்த உருளைக்கிழங்கு – 1, முந்திரி – 20,தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, உளுந்து – 1 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த ஜவ்வரிசி அடை செய்வதற்கு ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய ஜவ்வரிசியில் தான் அடை நன்றாக வரும். ஊற வைக்காமல் செய்யக்கூடாது. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு ஜவ்வரிசி நன்றாக படித்து தண்ணீர் இல்லாமல் ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் முதலில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு கடுகு, சீரகம், உளுந்து, தாளித்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் , இஞ்சி, அனைத்தையும் சேர்த்து அதுவும் நன்றாக வதங்கிய பிறகு இதை அப்படியே எடுத்து ஜவ்வரிசி ஊறவைத்து எடுத்து வைத்திருப்பீர்கள் அல்லவா, அந்த பௌலில் இதை சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இத்துடன் முந்திரி, துருவிய தேங்காய், உருளைக்கிழங்கு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து இத்துடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்துமல்லியம் சேர்த்து நன்றாக அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.

இது ஒரு பத்து நிமிடம் இருக்கட்டும் அனைத்தும் மாவில் நன்றாக ஊறி வந்தவுடன், அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து காய்ந்தவுடன் ஒரு வாழை இலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து கொள்ளுங்கள். மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். மிகவும் பெரியதாக இருந்தால் இந்த அடை உடைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு என்ன பண்றதுன்னு தெரியலையா? ஒரே ஒரு கப் இட்லி மாவு இருக்கா அது போதுமே, சூப்பரா ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தயார் பண்ணிடலாம் வாங்க.

இப்போது வாழை இலையில் மாவை தட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி அடை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அடைக்கு காரச் சட்னி பூண்டு சட்னி அனைத்துமே இதற்கு நல்ல சைடு டிஷ் தான்.

- Advertisement -