ரவா லட்டு சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் ஒரு முறை ஜவ்வரிசியில இப்படி லட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இது வரைக்கும் இவ்வளவு டேஸ்டா லட்டு சாப்பிட்டதே இல்லைன்னு சொல்வீங்க.

javvarisi laddu
- Advertisement -

விசேஷ நாட்களில் வீட்டில் செய்யப்படும் இனிப்பு பட்டியலில் எப்போதும் ரவா லட்டு இடம் பெற்று இருக்கும். இதற்கு காரணம் இந்த ரவா லட்டு சமையல் தெரியாதவர்கள் கூட எளிமையாக செய்து விடுவார்கள். அதே சமயத்தில் இதன் சுவையும் மிகவும் நன்றாகவே இருக்கும். அப்படி எளிமையான ஒரு லட்டு ரெசிபியை இன்னும் எளிமையாக ஜவ்வரிசியை வைத்து எப்படி சுவையாக செய்வது என்பதை தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த லட்டு செய்வதற்கு முதலில் ஒரு கப் ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்தை விட இன்னும் கொஞ்சம் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போல் கால் கப் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கால் கப் அளவிற்கு முந்திரி பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது லட்டு செய்ய ஆரம்பித்து விடுவோம். அதற்கு அடுப்பில் அடிகனமான கடாய் வைத்து கால் கப் நெய் ஊற்றி சூடான பிறகு அரைத்து வைத்த ஜவ்வரிசி சேர்த்த பின் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொடித்து வைத்த நட்ஸ் மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்த பிறகு நிறம் மாறாமல் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் ஓரளவிற்கு வறுபட்ட பிறகு கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வதக்க வேண்டும். நீங்கள் வதக்கும் போது தேங்காய் நன்றாக மணம் வர வேண்டும். ஆனால் நிறம் மாறக் கூடாது இது தான் பக்குவம். இப்படி வறுத்தப் பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து கால் கப் கல்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கற்கண்டு அனைத்து கடைகளிலும் கிடைக்கும். அதை வாங்கி இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த கற்கண்டு பொடி செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் ஆக்கிக் கொள்ளுங்கள். இப்போது இந்த பவுடரை நாம் ஏற்கனவே வறுத்து ஆற வைத்திருக்கும் ரவை தேங்காய் உடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த பிறகு இதில் கால் டம்ளர் காய்ச்சிய வெதுவெதுப்பான பாலை ஊற்றி லட்டு பிடிக்க ஆரம்பித்து விடலாம். இந்த லட்டு பிடிக்கும் போது சற்று அழுத்தமாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் உட்பட அனைத்தையும் வறுத்து சேர்த்திருப்பதால் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. அத்துடன் கற்கண்டு சேர்த்து இருப்பதால் அனைவருமே இந்த லட்டை சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: முட்டை கறி செய்ய போறீங்களா? இந்த 1 பொருளையும் சேர்த்து செய்து பாருங்கள் சுவை வீட்டையே ஒரு வழி செய்து விடும்!

இந்த லட்டு ரவா லட்டை விட வித்தியாசமான சுவையில் அதே நேரத்தில் மிகவும் நன்றாகவே இருக்கும். இதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக செய்யக் கூடியது தான். வித்தியாசமான இந்த லட்டு ரெசிப்பி நீங்களும் ஒருமுறை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -