பருப்பு சேர்க்காம ஒரு சூப்பரான மசால் வடையை இந்த பொருள் வைச்சு செஞ்சி பாருங்க சூப்பரா இருக்கும்

- Advertisement -

ஜவ்வரிசி வடை | Javvarisi vadai Recipe in Tamil

இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும் பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான மசால் வடை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1கப், உருளைக்கிழங்கு – 3, வேர்க்கடலை – 1/2 கப், இஞ்சி -1 துண்டு (துருவியது), பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி -1/4 கப் (பொடியாக நறுக்கியது), சீரகம் -1டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

 செய்முறை 

ஜவ்வரிசி வடை செய்வதற்கு ஜவ்வரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை அப்படியே ஊற விடுங்கள். அடுத்ததாக மூன்று உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மூன்று மணி நேரம் கழித்து ஜவ்வரிசி தண்ணீரில் எல்லாம் உரிந்து, ஐவ்வரிசியை கையில் எடுத்து அழுத்தினால் மாவு போல் வர வேண்டும். அந்த அளவிற்கு ஊறி இருந்தால் தான் அது சரியான பதம்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை எடுத்து கொரகொரப்பாக பவுடர் செய்து அதை இந்த ஜவ்வரிசியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு துண்டு துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு என அனைத்தையும் கலந்த பிறகு எலுமிச்சை சாறு, மசித்து வைத்து உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு இந்த மாவை எடுத்து சின்ன சின்ன வடைகளாக தட்டி எண்ணெயில் போடுங்கள்.

வடையை போட்டு இரண்டு நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை திருப்பி போடுங்கள். வடையை போட்ட உடன் திருப்பி போட்டால் வடை உடைந்து விடும். வடையை இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்றாக சிவந்து வந்த பிறகு எடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: 1 கப் கோதுமை இருந்தா ஓவன் இல்லாமல் 20 மினிட் குக்கர் கப் கேக் ஈசியாக எப்படி வீட்டில் செய்வது?

நல்ல சுவையான, கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை தயார். உங்களுக்கும் இந்த ரெசிபி பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

- Advertisement -