அனைத்திலும் வெற்றியை தரும் ஜெய யோகம் பற்றி தெரியுமா

astrology

முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற குறளின் கடைசி வரிகள், எந்த ஒரு விடயத்திலும் வெற்றி பெற ஈடுபட்டு வெற்றி பெற முயல்பவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளாகும். ஆனால் ஒரு சிலர் கடினமாக எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் அனைத்திலும் வெற்றி பெறுவதை நாம் காண்கிறோம். ஜோதிட ரீதியில் இவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால் இவர்களுக்கு “ஜெய யோகம்” இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ஜெய யோகத்தை பற்றி மேலும் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்வோம்.

astrology

ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகம் நீச்சமும், பத்தாம் வீட்டிலிருக்கும் கிரகம் உச்சமும் பெற்றிருந்தால் ஜெய யோகம் அந்நபருக்கு ஏற்படுகிறது.

உதாரணம் :
உங்கள் ஜாதகத்தில் லக்கினம் எங்கு இருக்கிறதோ அதுவே முதலாம் இடம். அந்த கட்டத்தில் இருந்து ஆறாவது கட்டம் மற்றும் பத்தாவது கட்டத்தில் என்ன கிரகம் இருக்கிறது என்று பாருங்கள். ஒவ்வொரு கட்டத்திற்கு ஒரு ராசி வீடு இருக்கும். அதற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவனைக்கேற்ப உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகம் நீச்சம் அடைந்துள்ளதா, உச்சம் பெற்றுள்ளதா என காணலாம். அதை அறிய முதலில் நீங்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அட்டவணையை படியுங்கள்.

ஒவ்வொரு ராசிக்கான ராசி அதிபதிகள், உச்சம், பகை கிரகம் விளக்கம்

Jaya yogam
ஜெய யோகம் உதாரண ஜாதகம்

இப்போது இங்கு உள்ள ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ஜாதகத்தில் லக்கினம் தனுசு ராசியில் உள்ளது. லக்கினத்தில் இருந்து ஆறாவது வீடு ரிஷபம். மேலே உள்ள அட்டவணைப்படி ரிஷபத்தில் ராகு நீசம் பெற்றுள்ளார். அதே போல பத்தாவது வீடு கன்னி. இங்கு புதன் உச்சம் பெற்றுள்ளார். ஆகையால் இந்த ஜாதகருக்கு ஜெய யோகம் உண்டு.

- Advertisement -

இந்த ஜெய யோகத்தில் பிறந்த நபர்கள் நல்ல வலிமை வாய்ந்த உடலைப் பெற்றிருப்பார்கள். பிறர் மதிக்கும் கம்பீரமான முகத்தோற்றமும், குணங்களும் இருக்கும். தங்களின் பெற்றோர்களை மதித்து நடக்கும் வாரிசுகளாக இருப்பார்கள். சிறந்த கல்வியை கற்பார்கள். ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெரும் ஆற்றல் இந்த ஜெய யோகத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் உண்டு.
அரசாங்கம், ராணுவம் போன்ற துறைகளில் உயர் பதவிகளை குறுகிய காலத்திலேயே அடைவர். இவர்களுக்கு கடன் போன்றவற்றை வாங்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை விரைவிலேயே வட்டியுடன் திருப்பி அடைத்து விடும் நிலையும் உண்டாகும்.

astrology

அவ்வப்போது சிறிது உடல்நலம் பாதித்தாலும் கடுமையான நோய்கள் ஏதும் ஏற்படாது. இவர்களிடம் நேரடியாக மோதும் துணிவில்லாமல் மறைமுகமாக மோதக்கூடிய எதிரிகள் இருப்பர். அவர்களின் சதிகள் அனைத்தையும் உடைத்து வெற்றி வாகை சூடுவார்கள். பத்தாம் இடத்தில் இருக்கும் கிரகம் உச்சம் பெற்றிருப்பதால் தொழில் துறையில் ஈடுபட்டு பல கோடிகளை ஈட்டும் மிகப்பெரும் தொழிலதிபர்களாக இவர்கள் விளங்குவார்கள். அரசாங்கமே இவர்களிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு தாங்கள் ஈடுபடும் துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். குடும்ப வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும். இவர்களில் சிலருக்கு திருமணத்திற்கு பின்பான காலத்தில் தான் யோகமான வாழ்க்கையே அமையும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் ராகு முதலாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

ஜாதகம் பார்ப்பது எப்படி என்று மேலும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have details about jaya yoga in astrology. In tamil we can call it as Jaya Yogam Palangal.