ஒவ்வொரு ராசிக்கான ராசி அதிபதிகள், உச்சம், பகை கிரகம் விளக்கம்

astrology

ஒவ்வொரு நவகிரகத்திற்கும் ஒரு ராசி வீடாகும். சில கிரதத்திற்கு இரண்டு வீடுகள் உண்டு. நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகு மற்றும் கேது கிரகத்திற்கு வீடு கிடையாது. மாறாக அவர்கள் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாகும்.

astrology

ராசிஅதிபதி
மேஷம்செவ்வாய்
ரிஷபம்சுக்கிரன்
மிதுனம்புதன்
கடகம்சந்திரன்
சிம்மம்சூரியன்
கன்னிபுதன்
துலாம்சுக்கிரன்
விருச்சிகம்செவ்வாய்
தனுசுகுரு
மகரம்சனி
கும்பம்சனி
மீனம்குரு
  • மேஷம், விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். இவர் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகனான இருக்கிறார்.
  • ரிஷபம் , துலாம் ராசி அதிபதி சுக்கிரன். இவர் களத்திர காரகன் ஆவார்.
  • மிதுனம், கன்னி ராசி அதிபதி புதன். இவர் கல்வி, புத்தி காரகன் ஆவார்.
  • கடக ராசி அதிபதி சந்திரன். இவர் மனம், தாய்க்குக் காரகன் ஆவார்.
  • சிம்ம ராசி அதிபதி சூரியன். இவர் உடல் , தந்தைக்குக் காரகன் ஆவார்.
  • தனுசு , மீனம் ராசி அதிபதி குரு. இவர் தனம், புத்திர காரகன் ஆவார்.
  • மகரம் , கும்பம் ராசி அதிபதி சனி. இவர் ஆயுள், தொழில் காரகன் ஆவார்.

astrology

எந்த ஒரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருந்தால் அதன் சக்தி மூன்று மடங்காக இருக்கும். கிரகத்தின் சொந்த வீட்டிற்கு ஆட்சி வீடு என்று பெயர். அதே போல ஒரு சில வீடுகள் கரங்களுக்கு உச்ச வீடாகவும் நீச வீடாகவும் இருக்கும். உச்ச வீடுகளில் இருக்கும்பொழுது அந்த கிரகத்திற்கு உச்ச பலம் இருக்கும். அதாவது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் இருக்கும். நீச வீட்டில் இருக்கும் சமயத்தில் அந்த கிரகம் பலம் இழந்து இருக்கும்.

கீழே ராசிக்கட்டம் மற்றும் கிரகத்திற்கான உச்சம், பகை, நட்பு, ஆட்சி, சமம் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஜாதகத்தை இதோடு ஒப்பிட்டு உங்கள் ஜாதக கிரக தன்மையை அறிந்துகொள்ளலாம்.

Rasi Kattam
ராசி கட்டம்
ராசிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்ரன்சனிஇராகு/கேது
மேஷம்உச்சம்சமம்ஆட்சிசமம்நட்புசமம்நீசம்பகை
ரிஷபம்பகைஉச்சம்சமம்நட்புபகைஆட்சிநட்புநீசம்
மிதுனம்சமம்நட்புபகைஆட்சிபகைநட்புநட்புநட்பு
கடகம்சமம்ஆட்சிநீசம்பகைஉச்சம்பகைபகைபகை
சிம்மம்ஆட்சிநட்புநட்புநட்புநட்புபகைபகைபகை
கன்னிசமம்நட்புபகைஆட்சி, உச்சம்நட்புநீசம்நட்புநட்பு
துலாம்நீசம்சமம்சமம்நட்புபகைஆட்சிஉச்சம்நட்பு
விருச்சிகம்நட்புநீசம்ஆட்சிசமம்நட்புசமம்பகைஉச்சம்
தனுசுநட்புசமம்நட்புசமம்ஆட்சிநட்புசமம்நட்பு
மகரம்பகைசமம்உச்சம்சமம்நீசம்நட்புஆட்சிநட்பு
கும்பம்பகைசமம்சமம்சமம்சமம்நட்புஆட்சிபகை
மீனம்நட்புசமம்நட்புநீசம்ஆட்சிஉச்சம்சமம்நட்பு

இதையும் படிக்கலாமே:
சனிபகவானால் ஏற்படும் யோக பலன்கள் பற்றி தெரியுமா ?

ஜாதகம் பார்ப்பது எப்படி என்று மேலும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

 

English Overview:
Here we have Rasi Athipathi list in Tamil. One can find Rasi Athipathi for each Rasi here. Rasi Athipathi for Mesham and Viruchigam is Chevvai, Rasi Athipathi for Rishabam and Thulam is Sukran, Rasi Athipathi for Mithinum and Kanni is Budhan, Rasi Athipathi for Kadagam is Chandiran, Rasi Athipathi for Simmam is Suriyan, Rasi Athipathi for Dhanusu and Meenam is Guru, Rasi Athipathi for Magaram and Kumbam is Sani.