- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த சுவையான இஞ்சி குழம்பை செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு இருக்கும்...

ஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த சுவையான இஞ்சி குழம்பை செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு இருக்கும் ஜீரண பிரச்சனை காணாமல் போய்விடும்

- Advertisement -

ஒரு சிலர் நன்றாக சாப்பிட்டுவிட்டு இரவு உறங்கும் பொழுது அவஸ்தைப்படுவார்கள். அவர்களுக்கு பொதுவாகவே ஜீரண சக்தி குறைவாக இருக்கலாம். அல்லது சாப்பிட ஏதாவது ஒன்று அவர்களுக்கு செரிமானமாகாமல் பிரச்சனை கொடுக்கலாம். இதனால் தூக்கம் இல்லாமல் மறுநாள் காலை எழுந்திருக்கும்போது மிகவும் அசதியாக தோற்றமளிப்பார்கள். இவ்வாறான ஜீரண பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இதற்காக மருந்தகங்களில் சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையில்லாத பிரச்சனைகள் தான் தோன்றுகின்றன. எனவே இந்த ஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட சுவையான இஞ்சி குழம்பு வைத்துச் சாப்பிடுங்கள். உங்கள் பிரச்சினைக்கு உடனே விடுதலை கிடைக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

stomach-

தேவையான பொருட்கள்:
இஞ்சி – 100 கிராம், சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 10 பல், தக்காளி சிறியது – 1, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் – கால் மூடி, தனியா தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து தண்ணீரில் இரண்டு, மூன்று முறை கழுவி பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் புளியை ஊறவைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Ginger - Inji

பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் கால் மூடி தேங்காயைத் துருவி சேர்த்துக் கொண்டு, தேங்காய் துருவல் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் தனியா தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வதக்கிய இஞ்சி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். இதனை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, அடுத்ததாக வதக்கி வைத்துள்ள இந்த மசாலாவை சேர்த்து ஸ்பைன் பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

kola

பின்னர் 10 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

inji

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மூடி போட்டு 5 இலிருந்து 7 நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால் போதும். சுவையான இஞ்சி குழம்பு தயாராகிவிடும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

சற்று முன்