- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாய்களுக்கு உணவளிப்பது பைரவர் அருளை கொடுக்கும் என்றால், எந்தெந்த விலங்குகளுக்கு உணவளிப்பது, எந்தெந்தக் கடவுளரின் அருளை...

நாய்களுக்கு உணவளிப்பது பைரவர் அருளை கொடுக்கும் என்றால், எந்தெந்த விலங்குகளுக்கு உணவளிப்பது, எந்தெந்தக் கடவுளரின் அருளை தரும் தெரியுமா?

- Advertisement -

பித்ரு தோஷங்கள் நீங்க பசுவிற்கு அகத்திக்கீரை, பழங்கள் போன்றவற்றை தானம் கொடுக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பைரவர் உடைய வாகனமாக விளங்கும் நாய்க்கு தினமும் உணவு வைக்க பைரவர் அருள் கிடைக்கும், எம பயம் நீங்கும் என்கிற ஐதீகமும் உண்டு. இந்த வகையில் எந்தெந்த உணவுகளுக்கு, நாம் என்னென்ன தானம் செய்ய வேண்டும்? செய்யும் தானங்கள் மூலம் என்னென்ன கடவுளின் அருள் நமக்குக் கிடைக்கும் என்கிற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

surya-bhagavan1

முதலாவதாக ஜாதகத்தில் கிரஹ பிரச்சனைகள் தீர, நம் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் நீங்க சூரிய பகவான் அருள் பெற வேண்டும். சூரிய பகவான் அருள் இருந்தால் நம் வாழ்வில் ஏற்றம் காணலாம். சூரிய பகவான் அருள் பெற குதிரைகளுக்கு தேவையான உணவுகளை தானம் செய்ய வேண்டும். யானை மற்றும் மாடுகளுக்கு தேவையான உணவுகளை நாம் தானம் கொடுப்பதன் மூலம் குரு பகவான் அருளைப் பெற்றுக் கொள்ளலாம். குருபகவான் அருள் இருந்தால் தான் எந்த விதமான ஜாதக தோஷங்கள், கல்வி பிரச்சனைகளும், திருமண தடைகளும் எளிதாக அகலும். எனவே குருவருள் பெற யானை மற்றும் மாடுகளுக்கு தீவனம் கொடுங்கள்.

- Advertisement -

மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்களுக்கு தேவையான உணவுகளை நீங்கள் கொடுத்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும். நம் மனம் தெளிவாக இருக்க சந்திர பகவான் அருள் தேவை. சந்திரன் அருள் இருந்தால் தான் நம்மால் சுயமாக சிந்திக்க முடியும் எனவே உக்கிரமாக இருக்கும் சந்திர தோஷங்களை நீர் வாழ் உயிரினங்களை வளர்த்து வரலாம் அல்லது உணவு கொடுத்து வரலாம்.

goat-hen

ஆடு, செம்மரி ஆடு, குரங்கு போன்றவற்றுக்கு நீங்கள் உணவினை தானமாக கொடுத்து வந்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தடைகள் அத்தனையும் விலகுவதாக நம்பிக்கை உண்டு. செவ்வாய் பகவான் திருமணத்தில் தடையை ஏற்படுத்தக் கூடியவர் எனவே நம் கர்மாவை குறைக்க இது போன்ற விலங்குகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்து செவ்வாய் உடைய அருளை பெறலாம்.

- Advertisement -

புதன் கிரகத்தின் அனுகிரகம் உள்ளவர்கள் சிறந்த பேச்சாளராக திகழ்வார்கள். அத்தகையவர்களுக்கு புதன் திசையில் பிரச்சனை இருந்தால் நீங்கள் கிளி, புறா போன்ற பறவைகளுக்கு தானியங்களையும், உணவுகளையும், தண்ணீரையும் வைக்கலாம். உங்கள் வீட்டிலேயே திறந்த வெளிகளில் தானியங்களை பரப்பி பாருங்கள், எத்தனை பறவைகள் வந்து அதனை உணவாக வாங்கி செல்லும் என்று. இதனை வாடிக்கையாக கொண்டால் புதன் கிரகத்தின் பாதிப்புகள் நீங்கும்.

sukran

சுகபோக வாழ்க்கையைக் கொடுக்கும் சுக்கிர பகவான் அருள் பெற, அள்ள அள்ள குறையாத செல்வம் பெற புறாக்களுக்கு தானியங்களை உணவாக கொடுக்க வேண்டும். வெள்ளை நிற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தானம் கொடுத்து வர சுக்கிர அருளை பெறலாம். அதே போல சனி பகவான் அருள் பெற கருப்பு நிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். காகம், எருமை, கருத்த நாய் போன்றவற்றுக்கு நீங்கள் உணவு கொடுத்து வந்தால் சனி பகவானுடைய அருளை நிச்சயம் பெறலாம்.

rahu-ketu

எறும்புகளுக்கு அரிசி மாவு அல்லது அரிசி போன்ற உணவு பொருட்களை தானம் கொடுப்பதன் மூலம் ராகு-கேது அருளைப் பெறலாம். சர்க்கரையை எறும்புகளுக்கு தானம் கொடுத்து வர ராகு, கேது தோஷம் நீங்குமாம். எளிதாக ராகு கேது அருள் பெற நாய்களுக்கு ரொட்டியை தானம் கொடுக்கலாம். ராகு கேது மட்டுமல்லாமல் நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதன் மூலம் கால பைரவர் அருளையும் பெறலாம். தன் வாழ்நாளில் 2 சதவீத வாழ்வில் ஜீவராசிகளுக்கு செலவிட்டு வந்தால் விரைவாகவே நம் ஜாதகம் வலுப்பெற்று நற்கதி பெறலாம்.

சற்று முன்