ஜென்ம ஜென்மமாக நம்மை தொடர்ந்து வரும் தோஷங்களும், சாபங்களும் விலக கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினாலே போதும். நீண்டநாள் கஷ்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

sudam
- Advertisement -

கையில் எடுக்கும் எந்த ஒரு வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வில்லை. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வி. வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழியே கிடையாது. வேலைக்கு சென்றாலும் அதில் நிரந்தரமாக தங்கி சம்பளம் வாங்க முடியாத சூழ்நிலை. யாரிடம் போய் உதவி என்று கேட்டாலும் அதன் மூலம் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் வந்துவிடுகிறது. ஆகமொத்தத்தில் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வழியே இல்லை. இப்படி நான்கு திசைகளிலும் பிரச்சனை சூழ நம்முடைய வாழ்க்கை இருந்தால், நமக்கு கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு தோஷம், சாபம் நம்மை பின் தொடர்ந்து வருகிறது என்றுதான் அர்த்தம்‌.

நாம் போன ஜென்மத்தில் செய்த கர்ம வினையால் கூட இந்த தோஷங்களும் சாபமும் நம்மை தொடரலாம். இது இந்த ஜென்மத்தில் நிற்கப் போவது கிடையாது. இந்த ஜென்மத்தில் தான் இவ்வளவு கஷ்டப்பட்டோம். அடுத்த ஜென்மத்திலாவது நல்ல பிறவி கிடைக்குமா என்று கேட்டால், நிச்சயம் இருக்காது. இதே கஷ்டம் உங்களை அடுத்த ஜென்மத்திலும் வந்து பின் தொடரும். இந்த ‘ஜென்ம சாபத்திற்கு’ முற்றுப்புள்ளி வைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரம் உங்களுக்காக. அந்த காலத்தில் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான பரிகாரம்.

- Advertisement -

நாம் எந்த ஒரு பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக தேவை. முதலில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் பெருங்காய கட்டி, கற்பூரம். ஒரு சிறிய தட்டின் மேல் பெருங்காயத்தை வைத்துவிட்டு அதன் மேலே கட்டி கற்பூரத்தை வைத்து குலதெய்வத்தை நினைத்து அந்த கற்பூரத்தை பற்ற வைத்து விடுங்கள்.

பெருங்காயத்தின் மேலே கற்பூரம் சுடர்விட்டு எரியும் போது, நீங்கள் அந்த கற்பூரத்தை பார்க்கவேண்டும். கற்பூரம், பெருங்காயத்தின் மேலே எரிந்து முடியும் வரை கற்பூரத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து இருங்கள். கற்பூரத்தின் முன்பு அமர்ந்திருக்கும் சமயத்தில் ‘நான் அறிந்தும் அறியாமலும் செய்த முன்ஜென்ம பாவங்கள், இந்த ஜென்ம பாவங்கள், பாவங்களால் உண்டாக்கப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இதோடு முடிந்து போகட்டும்’ என்று குலதெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இனி மனதார அறிந்து, எந்த பாவத்தையும் செய்யாமல் இருப்பேன் என்ற சங்கல்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கற்பூரம் எரிந்து முடிந்த பின்பு, தட்டில் இருக்கும் எரிந்த பெருங்காயத்தை அப்படியே வீட்டிற்கு வெளியில் கால் படாத இடத்தில் போட்டு விடலாம். பெருங்காயத்தின் மேல் கற்பூரத்தை ஏற்றும்போது பெருங்காயம் லேசாக வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக உங்களை விட்டு ஒரு அடி தூரம் தள்ளி கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

குறிப்பாக இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று உங்களுக்கு சௌகரியமான எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம். உச்சி வேளை 12 மணி நேரத்தை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு சனிக்கிழமை, ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -