உங்கள் குடும்பத்திற்கு தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா? 21 தலைமுறையாக தொடரும் சாபங்களை கூட போக்கக் கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு!

sabam1

நிறைய பேர் குடும்பத்தில் தொடர் கஷ்டங்கள் வந்து துன்பத்தை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதை தொட்டாலும் தோல்வி, எந்த வேலையை செய்தாலும் அதில் ஈடுபாடு இருக்காது. தொடர்ந்து பணக்கஷ்டம் மனக்கஷ்டம் சண்டை சச்சரவுகள் உடல் உபாதைகள் என்று இன்னல்களை சந்தித்து வருவார்கள். இப்படிப்பட்டவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், பல தலைமுறைகளாக அவர்களை தொடர்ந்து வரும் சாபம் ஒரு காரணமாக இருந்து வரும்.

sad-crying

யாரோ ஒருவர், எப்போதோ செய்த ஒரு பாவத்திற்கு அந்த குடும்பத்தில் வரும் அடுத்தடுத்த தலைமுறைகள் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருப்பார்கள். இதற்கு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் தீர்வு என்பதே கிடைக்காது. தலைமுறை சாபம், அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்வது எப்படி? தொப்புள்கொடி பந்தத்தின் மூலமாகத் தான். நம்முடைய தொப்புள் கொடி பந்தத்தின் மூலம் அடுத்தடுத்து தொடரக்கூடிய சாபத்தை எப்படி, நம் உடலைவிட்டு நீக்குவது என்று தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு தேவையான பொருள் குன்றின் மணி. எந்த வகை குன்றின் மணி கிடைத்தாலும் அதை நீங்கள் வாங்கி, இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்தலாம். சுலபமாக நாட்டு மருந்து கடைகளில் கூட கருப்பு சிவப்பு வண்ண குன்றின்மணி கிடைக்கின்றது. அதை வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை.

Kundrimani

உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரு கைகளையும் சேர்த்து பைரவ முத்திரையை வைத்துக் கொள்ள வேண்டும். பைரவ முத்திரை என்பது, மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முத்திரையை உங்களுடைய தொப்புளுக்கு அருகில் சரியாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பைரவ முத்திரையை வைத்துக் கொண்டே உங்களுடைய உள்ளம் கைகளில் சிறிதளவு குன்றின் மணிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இதே முத்திரையை கையில் கொண்டு, குன்றின் மணியோடு ஐந்து நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து உங்களைத் தொடரும் பாவங்கள், உங்களைத் தொடரும் சாபங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கி விட வேண்டும் என்று மனதார இறைவனை பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.

bairava-bairavi-mudra

அதன்பின்பு கையிலிருக்கும் குன்றின் மணியை ஒரு பேப்பரில் போட்டு மடித்து எடுத்துக்கொண்டு போய் கால் படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற நதியில் போட்டு விடலாம். இதை எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து 27 நாட்கள் செய்தால் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணரமுடியும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

kamatchi-amman6

21 நாட்கள் மட்டும் செய்துவிட்டு இந்த பரிகாரத்தை விட்டுவிட வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்வது நம்முடைய பல தலைமுறைகளுக்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் செய்த பாவத்திற்கு கூட விமோசனத்தை தேடித்தரும்.

praying-god

அந்த காலத்தில் சித்தர்கள் இந்த குன்றின் மணியை ஆன்மீக ரீதியான பல பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தார்கள். அதில் இந்த பாவ சாப விமோசனத்திற்காக குன்றின் மணி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய குடும்ப கஷ்டம் தீர, நீங்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.