தவானின் இந்த அதிர்ஷ்டம் தான் அவரை தொடர்ந்து காப்பாற்றி சிறப்பாக ஆட வைக்கிறது – சுனில் கவாஸ்கர்

sunil
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

koli dhawan

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். சில போட்டிகளாக சொதப்பி வந்த தவான் தற்போது பார்மிற்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மேலும் வலிமையினை அளித்துள்ளது என்றே கூறவேண்டும்.

- Advertisement -

இந்நிலையில் தவான் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : இந்திய அணியின் துவக்க ஜோடி தற்போது உள்ள பெஸ்ட் ஜோடியாகும். தவானின் இந்த நிதான ஆட்டம் என்னை கவர்ந்தது. அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் பலமாக அடிக்கப்படுகின்றன. எனவே, பந்துகள் எளிதாக பவுண்டரிக்கு செல்கின்றன.

dhawan

மேலும், நான் தொடர்ந்து தவானை கவனித்து வருகிறேன் அவர் தனது ஒவ்வொரு ஐ.சி.சி தொடருக்கு முன்னரும் தனது சிறப்பான பார்முக்கு மாறுவார். அதனால் அவரால் ஐ.சி.சி தொடர்களில் சிறப்பாக விளையாடமுடிகிறது. தவான் பங்கேற்ற அனைத்து ஐ.சி.சி தொடர்களிலும் இந்த பார்ம் அதிர்ஷ்டமே அவரை காப்பாற்றி அவரை சிறப்பாக விளையாட வைக்கிறது என்று நான் நினைக்கிறேன். என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அவருடன் ஆடிய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த இடத்தில் இறங்கினால் தோனி வெடித்து சிதறும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் – ரெய்னா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -