சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவதற்கான காரணங்கள்

astrology
- Advertisement -

‘மனிதர்களின் எதிர்காலம் பற்றி கூறும் ரகசியம்’ என்னும் ஜோதிடக் கலை தொடக்கத்தில் அரசர்கள் பிரபுக்கள் குறு நில மன்னர்கள் போன்றவர்களுக்கே பயன்பாட்டில் இருந்தாலும், தற்காலத்தில் எங்கும் எதிலும் ஜோதிடக்கலை நுழைந்து விட்டது. மனிதர்களுக்கு ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு எதிர்கால பலன் கூறும் ஜோதிடம் எல்லோருக்கும் பலிதம் ஆகுமா? என்றால், எண்பது சதவிகிதம்தான் பலிதம் ஆகும்.

astrology

சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவது ஏன்? அதற்கான கிரக நிலைகள் என்னென்ன என்று ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தியிடம் கேட்டோம்.

- Advertisement -

“மனிதர்களின் பிறப்பு, இறப்பு,  அமையும் புத்திரர்கள், ஒருவரது அந்தரங்கம், பற்றி துல்லியமாக கூறிவிடமுடியாது. கால நேரத்தை குறிக்கும்போது, ‘தி டைம் ஸ்லிப்’ என்று கூறுவதுபோல ஜோதிடத்தின் பலன்களும் சில வேளைகளில் தவறிவிடுவதும் உண்டு. அவ்வாறு பலன்கள் தவறிவிடும்போது ஜோதிடமே தவறு என்று கூறிவிடக் கூடாது.

கால நேரம், கிரகங்கள் சுழற்சி இதனை ஈர்க்கும் சக்தியாக இருக்கும். நமது பூமியின் சுற்றுவட்டப்பாதை இவற்றில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.

- Advertisement -

astrology

நமது கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் அவ்வாறு கூறினால்,சொல்லும் வாக்கு பலிதம் ஆகாது.

இவர்களது படைப்பு, கடவுளின் நேரடிகண்காணிப்பில் இருப்பதாக கருதப்படும். இவர்களது படைப்பில் வேறு ஏதோ ஒரு கூடுதல் நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் முடியும் வரை பூமியில் ஜீவிப்பார்கள்.

- Advertisement -

இவை ஒருபுறம் இருந்தாலும், நாம் சாலைகளின் ஓரத்தில் அழுக்குத் துணிகளுடன், உடல் வாடை பிடித்த மனநிலை பாதித்த மனிதர்களையும், பிச்சை எடுத்துப் பிழைக்கும் அகோரிகள், விகாரமான உடல் முகம்கொண்ட மனிதர்களைப் பார்த்து இருப்போம். இவர்களைப் பார்க்கும்போது ஜோதிடம் இவர்களுக்குப் பலிக்குமா?  பலிக்காதா?  என்றெல்லாம்  நினைப்போம்.
நிச்சயம் இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது. காரணம் அவர்களது படைப்பு அதற்காகவே இருக்கும். அப்படியென்றால்
இவர்களுக்கு எந்தக் கிரகமும் நன்மை செய்யாது என்றுதான் கூறவேண்டும். சரி, ஜோதிடம் பலிதம் ஆகாத ஜாதக கிரக நிலைகளைப் பற்றிப் பார்ப்போம்.

Astrology

ஜோதிட பலிதம் ஆகாத கிரக நிலைகள் :

*  நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிதமாகாது.

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில், சாக்கடை ஓரங்களில்  வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

astrology

* ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், ஜோதிடம் பலிக்காது.

* லக்னத்துக்கு பாதகாதிபதியின்  நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.

வேறு சில அமைப்புகள்:

* கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்க முடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கும் ஜாதகம் சொன்னால்  பலிதம் ஆகாது.

* கேதுவை நோக்கி எல்லா கிரகங்களும் சென்றுகொண்டே இருந்தால், என்னதான் யோகம் இருந்தாலும், கைகூடாமலே போகும்.  தக்க சமயத்தில் இவர்களது மதியைக் கெடுத்து விடுவான்.’நல்லாதான் எல்லாத்தையும் செய்து கொண்டு இருந்தான். கடைசிநேரத்துல ஏன்தான் அவன் குணம் அப்படி போச்சுன்னே தெரியவில்லை’ என சொல்வதை நாம் சில சமயம் கேட்டிருப்போம். அதற்குக் காரணம் இதுபோன்ற அமைப்புதான்.
இவர்களுக்கும் நல்ல வாக்கு,  நல்ல அறிவுரைகள் என எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏன், முறையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுத்தால்கூட பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

astrology

* அமாவாசை திதியில் பிறந்து சூரியன்-சந்திரன்-சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன்-சனி இவர்கள் நீசம் பெற்றாலோ அழுக்கு நிறைந்த உடைகளுடன் பிச்சைக்காரராக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தாலும், அல்லது இவர்கள் அனைவரும் ராகு கேது நட்சத்திர சாரம் பெற்றாலும், இவர்களுக்கு ஜோதிடம் பலிதம் ஆகாது.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர்கள் எதை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம் தெரியுமா ?

ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம்  இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.”

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -