வீட்டிலேயே செய்யக்கூடிய ஜோதிட பரிகாரங்கள்

astrology

ஜோதிடம் என்பது நாம் பிறக்கும் போது வானில் இருந்த கிரகங்களின் நிலைகொண்டும், தற்போது அந்த கிரகங்கள் இருக்கும் நிலை அறிந்து நமக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை கூறும் ஒரு கலையாகும். இதன் மூலம் நமக்கு ஏதேனும் தோஷம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருப்பதாக அறிந்தால் அதற்கு ஜோதிட சாத்திரத்தின் படியே பரிகாரங்கள் செய்வது ஜோதிட பரிகாரம் எனப்படும். அந்த வகையில் மிக முக்கியமான ஜோதிட பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Guru astrology

நாக தோஷம் பரிகாரம்

“நாக தோஷம்” என்பது ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். நாக பாம்புகளை கொல்வதால் ஒருவருக்கு நாக தோஷம் ஏற்படுகிறது. இதனால் ஒரு நபரின் வாழ்க்கையில் திருமண தாமதம் அல்லது நடைபெறாமல் போவது, குழந்தை பேறின்மை, தொழில் வியாபாரங்களில் மேன்மை இல்லாத நிலை ஏற்படுத்தும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் “காளஹஸ்தி” கோவிலுக்கு சென்று அங்கு கோவிலில் வீற்றிருக்கும் “ராகு மற்றும் கேது” பகவான்களுக்கு பூஜை செய்து வழிபடுவது தான். அக்கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் உங்கள் பகுதியில் பாம்பு புற்றிருக்கும் கோவில்களில் புற்றிற்கு முன் விளக்கேற்றி, குங்குமம் வைத்து வழிபடவேண்டும். இது போல் 27 செவ்வாய் கிழமைகள் வழிபட வேண்டும்.

செவ்வாய் கிரக பரிகாரம்

அடுத்து செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கான பரிகாரத்தை பற்றி பார்ப்போம். பொதுவாக ஒரு நபருக்கு அவரது ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் கோட்சாரம் சரியில்லாத காலங்களில் விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையிலிருப்பவர்கள் முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகள் தோறும் வணங்கிவருவது சிறந்தது. மேலும் பிரதோஷ காலத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடுவது விபத்துகள் ஏற்படும் நிலையை நீக்கும்.

Lord Murugan

சூரியன் கிரக பரிகாரம்

உடல் ஆரோக்யம் சீராக இருக்க ஜாதகத்தில் சூரியனின் நிலை நன்கு இருப்பது அவசியம். கண்பார்வை குறைபாடு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள், ஜாதகத்தின் படி சூரியனின் கோட்சாரம் சரியில்லாத காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களாகும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் உதிக்கும் சூரியனையும் அன்றைய தினத்திலேயே சிவன் கோவிலுக்கு சென்று, செந்தாமரை பூவை சிவனுக்கு சமர்ப்பித்து, வழிபட்டுவருவதால் சூரியனின் அருளாசிகளினால் உடல்நலம் நன்றாக மேம்படும்.

- Advertisement -

Lord sooriyan

சுக்கிரன் கிரக பரிகாரம்

ஒருவரின் வாழ்வில் சிறந்த சம்பாத்தியம் ஏற்பட ஜாதகத்தில் செல்வ சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுக்கிரனின் கோச்சார நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று “திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்” கோவிலுக்கு சென்று பெருமாளையும் தாயாரையும் வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலேயே இனிப்புகளை நிவேதனமாக வைத்து சுக்கிர பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட வேண்டும்.

Sukran peyarchi astrology

இதையும் படிக்கலாமே:
பிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jothida pariharangal in Tamil. It is also called as Jothidam pariharam in Tamil or Jothidam pariikaaram in Tamil.