பிறர் மதிப்பை பெறக்கூடிய செல்வாக்கு ரேகை உங்கள் கையில் எப்படி உள்ளது பார்ப்போம்

Selvakku regai

ஒரு மனிதனுக்கு என்ன தான் மிகப்பெரும் செல்வம் மற்றும் இன்னபிற வசதிகள் ஏற்பட்டாலும் அந்நபருக்கு தன் சக மனிதர்கள் மற்றும் சமுதாயத்தில் செல்வாக்கு ஏற்பட்டால் மட்டுமே அவர் பிறரால் அதிகம் மதிக்கப்படுகிறார். கைரேகை ஜோதிடத்தில் “செல்வாக்கு ரேகை” ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய செல்வாக்கு மற்றும் இதர அம்சங்களை பற்றி கூறுகிறது. அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Selvakku regai
செல்வாக்கு ரேகை

இந்த “செல்வாக்கு ரேகை” பலரில் ஒருவருக்கே ஏற்படும் அறிய ரேகையாகும். உள்ளங்கையில் கட்டைவிரலின் அடிப்பகுதியில் சதைப்பகுதியுடன் இருக்கும் மேடு “சுக்கிர மேடு” எனப்படும். இந்த சுக்கிரமேட்டின் அடிப்பகுதியிலிருந்து ஒரு ரேகை தொடங்கி, அது அந்த கையின் ஆட்காட்டி விரல் மற்றும் கட்டைவிரல் ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கும் பகுதில் முடியும் ரேகை செல்வாக்கு ரேகை எனப்படும்.

இந்த ரேகை ஒருவருக்கு தெளிவாகவும், அழுத்தமாகவும், குறுக்கில் எந்த கோடுகளும் இல்லாத பட்சத்தில் இந்த நபர் ஒரு அரசனுக்கு நிகரான செல்வாக்கை மக்களிடம் பெற்றிருப்பார். அவர் உயர்ந்த பதவிகளில் இல்லையென்றாலும் கூட செல்வ செல்வாக்குடனும் மக்களின் பேரன்புடனும் வாழ்வார். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாகவும், மக்களுக்காக எத்தகைய தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பர்.

Kai regai

இந்த செல்வாக்கு ரேகை விட்டு விட்டு காணப்படும் நபர்கள் தங்களின் வாழ்வில் நன்மை, தீமை கலந்த பலன்களை அனுபவிப்பர். மேலும் இவர்களுக்கு சற்று பயந்த சுபாவமும் இருக்கும். செல்வாக்கு ரேகை மிக மெல்லியதாக இருக்கும் நபர்கள் வாழ்வில் ஒரு பிடிப்பின்றியே வாழ்வார்கள். மனக்கவலைகள் மற்றும் சஞ்சலங்கள் இவர்களுக்கு அதிகம் இருக்கும். இந்த செல்வாக்கு ரேகையின் குறுக்கே கூட்டல் குறி போன்ற ரேகை அல்லது குறி காணப்பட்டால் இவர்களுக்கு உடலும் மனமும் மிக பலவீனமாக இருக்கும். பிறரிடம் பொருள் சம்பந்தமான விடயங்களில் அடிக்கடி ஏமாறக்கூடிய நிலையும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
கை ரேகையை வைத்து ஆயுளை கணிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

இது போன்ற மேலும் பல கைரேகை ஜோதிடம் சம்மந்தமான தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have tips about Selvakku regai in Tamil.