நீண்ட நாள் உங்களை பின்தொடரும் கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவர, கடனை சீக்கிரம் அடைப்பதற்கு சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். தீராத கடனில் சிக்கித் தவிப்பவர்கள், இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில், வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை மட்டும் திருப்பி கொடுத்தால் போதும்.
மொத்த கடன் சுமையிலிருந்து நிரந்தரமாக வெளிவரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் மைத்ரேய முகூர்த்த நேரம் எப்போது வருகிறது, இந்த நேரத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இப்போது பார்த்து விடுவோமா.
ஜூலை 2025 மைத்ரேய முகூர்த்தம்
நாளை 7-7-2025 திங்கட்கிழமை பிரபஞ்ச வசிய நாள். இதை தேவதை நாள் என்றும் சொல்லலாம். 777 ஏஞ்சல் நம்பர்கள் ஒன்றாக இணைந்து வந்திருக்கிறது. இந்த நாளோடு நாளைய தினம் மைத்திரேயம் முகூர்த்தம் வந்திருப்பது அதி அற்புதம். நாளை திங்கட்கிழமை மதியம் 2:53 மணி முதல் 5:03 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம். இதில் இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால், இந்த நேரத்தில் வரும் மத்திய பகுதி அதிசக்தி வாய்ந்தது. மதியம் 3:36 மணி முதல் 4:19 மணி வரை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வாங்கிய கடனில் இருந்து ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்தால், அந்த கடன் முழுவதும் சீக்கிரம் அடையும்.
உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கிறது. யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர்களிடம் இந்த குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் 100 ரூபாயை திருப்பிக் கொடுத்தால் கூட போதும். அந்த ஒரு லட்ச ரூபாய் கடன் அதிவிரைவாக அடையும். ஒரு சில பேருக்கு எல்லாம், இந்த மாதம் மைத்திரேய முகூர்த்தத்தில் பரிகாரம் செய்தால், அடுத்த மைத்திரேய முகூர்த்தம் வருவதற்குள்ளாகவே கடன் அடைந்திருக்கிறது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிறையவே கை கொடுத்திருக்கிறது.
ஆனால் ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்கும்போது, 100 ரூபாய் திருப்பி கொடுத்தால் சில பேர் வாங்கி கொள்ள மாட்டார்கள். இதுபோல பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் என்ன செய்வது. ஒரு மொய் கவர் அல்லது என்வளப் கவர் ஏதாவது ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மேலே யாரிடம் நீங்கள் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி அதன் உள்ளே ஒரு பிரியாணி இலையை வைத்து, 100 ரூபாயை அந்த கவருக்குள் போட்டு விடுங்கள்.
இந்த பிரியாணி இலையில் வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி, அந்த குறிப்பிட்ட தொகையையும் எழுதி விடுங்கள். வீட்டு லோன் அடைய வேண்டும் பைக்லோன் அடைய வேண்டும் ரமேஷ் இடம் வாங்கிய கடன் 1,00,000 அடைய வேண்டும். இந்த கடன் சீக்கிரமாக அடைய வேண்டும் என்று, இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்தை 3 நிமிடம் பிரார்த்தனை வையுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.
திங்கட்கிழமை நீங்கள் அலுவலகத்தில், வெளியிடங்களிலோ, எந்த இடத்தில் இருந்தாலும் சரி, கையில் ஒரு மொய்க்கவர், ஒரு பிரியாணி இலை இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை இருந்த இடத்திலிருந்து ஒரு நிமிடத்தில் செய்துவிடலாம். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரம் லோன் அடைக்கவும் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகனின் அருளை பெற
பைக் லோன், வீட்டு லோன், நகை கடன், பர்சனல் லோன் எந்த லோன் வாங்கி இருந்தாலும், அந்த கடன் சீக்கரம் அடையவும் இந்த பிரார்த்தனையை வைக்கலாம். இவ்வளவுதான் பரிகாரம் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு நாள்பட்ட கடனும் சீக்கிரம் அடையும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.