அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.

kan thirusti

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றார் என்றாலே அவருக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்பது, அடுத்தவர்களின் பொறாமையும், வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். இந்த மூன்றும் சற்று அதிகமாகும் தருணத்தில், இவையே ஏவல், பில்லி, சூனியம் என்று மாறிவிடும். பொறாமை குணம் கொண்ட சிலர் அடுத்தவர்களின் வளர்ச்சியை தடுப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது. நம்முடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படும் நபர்களிடமிருந்தும், நமக்காக வைக்கப்படும் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை சக்திகளில் இருந்தும், நம்மை காத்துக் கொள்ள ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vellai-mudichu

இந்த பரிகாரத்திற்கு சதுர வடிவிலான சிறிய அளவு வெள்ளை துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் காய்ந்த மிளகாய் மூன்று, ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம், கைப்பிடி அளவு கல்லுப்பு, ஒரு ஸ்பூன் வென்கடுகு, முடிந்தவர்கள் சிறிதளவு தெரு மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து, அந்த வெள்ளைத் துணியில் சிறிய அளவு மூட்டையாக கட்டி கொள்ள வேண்டும். கட்டிய மூட்டையை நம் தலையை சுற்றி இடமிருந்து வலமாக மூன்று முறை, வலமிருந்து இடமாக மூன்று முறை, மேலும் கீழுமாக மூன்று முறை இப்படி சுற்றி வீட்டின் வெளியே வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டினுள் வந்து கதவை சாத்தி விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த பரிகாரத்தை செய்தால் என்ன நடந்துவிடுமோ என்ற பயம் வேண்டாம். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய பொருட்களெல்லாம் திருஷ்டி பரிகாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு நெருப்பில் இட கூடியதுதான். இதனால் இதை வெள்ளைத் துணியில் கட்டி எரிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

kan-thirusti

உங்களுக்கு இருக்கும் எந்த விதமான கண் திருஷ்டியாக இருந்தாலும், எந்த விதமான கெட்ட சக்திகளின் மூலம் உங்களுக்கு தொந்தரவு இருந்தாலும் அது உங்களை விட்டு நிச்சயமாக நீங்கிவிடும்.

- Advertisement -

kan-thirusti-vinayagar

இது தவிர வீட்டில் கண் திருஷ்டி படாமல் இருக்க மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு மற்றும் சிவப்பு நிற மீன்களை வளர்த்து வரலாம். வீட்டின் முன் வாசற்படியில் கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டி வைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை கண்திருஷ்டி நம் மேல் படாமல் இருக்க நமக்கு நடக்கும் நல்லதை அடுத்தவர்களிடம் வெளிப்படையாக கூறாமல் இருப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள், ஆடைகள், தங்க நகைகள் இப்படி எந்த பொருட்களை வாங்கினாலும், அதை மொத்தமாக அடுத்தவர் கண் பார்வையில் படும்படி வைக்கவும் கூடாது. எடுத்து அடுத்தவர்களுக்கு காட்டவும் கூடாது. இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பொருட்களை வாங்க முடிகின்றதோ? என்று பெருமூச்சு விட்டாலே போதும். அது நமக்கு தீராத வினையாக மாறிவிடும். அதிகமான பொருட்களை வாங்க முடியாதவர்களை பற்றி குறை கூறுவதாக இதற்கு அர்த்தமில்லை. வாங்க முடியாதவர்களின் ஏக்கம் கூட, நம் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்பதால் சில விஷயங்களை இலை மறை காய் மறையாக வைத்துத்தான் இந்த உலகத்தில் வாழ வேண்டியிருக்கிறது.

இதையும் படிக்கலாமே
உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டுமா? இந்த 6 பொருட்கள் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil. Kan thirusti remedies Tamil. Kan thirusti neenga Tamil.