உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டுமா? இந்த 6 பொருட்கள் போதும்.

kula-dheivam

ஒருவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் அவரது வீட்டிற்கு கிடைக்கவில்லை என்றால் மன நிம்மதியும், ஆரோக்கியமும், சந்தோசமும் இருக்கவே இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக குலதெய்வத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பதுதான் உறுதி. குலதெய்வத்தை மறக்காமல் நாம் வழிபட்டுக் கொண்டு வந்திருந்தாலும், சில கெட்ட சக்திகள் நம்முடைய குல தெய்வத்தின் கண்களை கட்டி விடும் என்று கூறுவார்கள். சிலருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அதாவது குல தெய்வத்தை நாம் எந்த முறையில், எப்படி வழிபட்டாலும், நம் குலதெய்வமானது, நமக்கு நன்மை செய்ய முடியாத அளவிற்கு சில கட்டுக்கள் விழுந்திருக்கும். அந்த கெட்ட சக்திகளின் கட்டுக்களை எல்லாம் அகற்றி குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் வர வைக்க இந்த 6 பொருட்களை நம் வீட்டு வாசலில் காட்டினாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuladheivam 1

விரலி மஞ்சள் ஒன்று, சந்தனம் சிறிதளவு, குங்குமம் சிறிதளவு, விபூதி சிறிதளவு, சாம்பிரானிதூள் சிறிதளவு, அடுப்புக்கரி ஒன்று. இவைதான் அந்த 6 பொருட்கள். இவை அனைத்தையும் ஒரு மூட்டையாக கட்டுவதற்கு சிறிய அளவு சிகப்பு துணியை புதியதாக வாங்கிக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் அந்த சிகப்பு துணியில் வைத்து சிகப்பு நூலால் கட்டினால், பெரிய நெல்லிக்காய் அளவு வந்தால் போதும்.

நீங்கள் கட்டிய அந்த மூட்டையை உங்கள் நில வாசப்படிக்கு உள்பக்கமாக ஆணியடித்து மாட்டிவிட வேண்டும். நிலவாசப்படியில் கட்டையில் ஆணிஅடிக்க வேண்டாம். சுவற்றில் ஆணி அடித்தால் போதும். நீங்கள் கட்டாயமாக இதை வாசற்படிக்கு உள்பகுதியில் தான் மாட்ட வேண்டும். அதாவது வாசப்படியில் வெளியே நிற்பவர்களுக்கு உள்ளே இருக்கும் இந்த முட்டையானது தெரியக்கூடாது. இதை ஒரு முறை செய்து உங்களது வீட்டில் மாட்டி விட்டால் போதும் அடிக்கடி மாற்ற தேவையில்லை.

vasal

உங்கள் குலதெய்வமானது எல்லா தடைகளையும் தாண்டி நிச்சயம் உங்களது வீட்டிற்குள் வரும் என்பது உண்மை. இதை நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் நீங்களே ஒரு வகையான மன நிம்மதியை உணர்வீர்கள். உங்கள் வீட்டில் வெகுநாட்களாக நடக்காமல் இருந்த நல்ல காரியம் ஒன்று விரைவாக நடப்பதன் மூலம் இதன் மகிமையை தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

உங்களது குலதெய்வத்தை கெட்ட சக்திகள் கட்டி வைத்து இருந்தால், வேறு எந்த தெய்வமும் கூட உங்களது கஷ்ட காலத்திற்கு வந்து உதவாது என்பதுதான் உண்மை. இதனால் முடிந்தவரை குலதெய்வம் ஆசி உங்களுக்கு இருக்கின்றதா என்பதை ஏதாவது ஒருவகையில்  உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும். குலதெய்வத்தின் ஆசி நம் குடும்பத்திற்கு கிடைக்கவில்லையோ என்ற சிறிய சந்தேகம் வந்தால் கூட அதற்கான பரிகாரத்தை உடனே செய்து விடுவது நல்லது.

murugan

முன் ஜென்ம வினை அதிகமாக இருப்பவர்களுக்குத்தான் குலதெய்வமே தெரியாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் கூட திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக நினைத்து வழிபட்டால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
இந்த உலோகத்தால் காப்பு அணிந்து உள்ளீர்களா? வியக்க வைக்கும் பலன்கள் இதோ.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kula deivam pooja Tamil. Kula deivam valipadu Tamil. Kula deivam vazhipadu. Kula deivam pariharam. Kula deivam veetil vara..