அடகு வைத்த நகையை விரைவில் மீட்கவும், அந்த நகை மீண்டும் அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் சொல்ல வேண்டிய சிறப்பு வாய்ந்த மந்திரம்

Nagai adamanam
- Advertisement -

இன்று அனைவர் வீட்டிலும் இருக்கின்ற பல பிரச்சனைகளில் தவறாமல் இருக்கின்ற ஒன்று என்னவென்றால் வீட்டில் இருக்கின்ற நகைகளை அடமானம் வைப்பது. இவ்வாறு அடமானம் வைத்த நகைகளுக்கு வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுவது, அந்த நகைகளை திருப்ப முடியாமல் அப்படியே விட்டு விடுவது, இல்லாவிடில் அவை ஏலத்திற்கு சென்று விடுவது என பலவித கஷ்டங்களை மனதில் சுமந்துகொண்டு இருக்கின்றனர். இப்படி வீட்டில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வாக நம் கையில் இருக்கும் நகைகளை அடகு வைத்து விடுகிறோம். ஆனால் அவற்றை திருப்பி மீட்டெடுப்பதற்கு பலவித போராட்டங்களை அனுபவிக்கிறோம். ஆனால் அப்படியும் அந்த நகை நமது வீட்டிற்கு திரும்பி வராமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நாம் சொல்ல வேண்டிய சிறப்பு மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

jwe

மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைக்கிறோம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.

- Advertisement -

நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏதேனும் தொழில் துவங்குவதாக இருந்தால் முதலில் நாம் செய்யும் தொழிலில் அனுபவம் இருக்கிறதா? அது சரியாக வருமா? என்று அலசி ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

sukkiran

ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.

- Advertisement -

ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.

ragu-rahu-dasa

அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகிற்க்கு சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.

kedhu

“ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி
வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம
தநூகரன புவாய நமோ நம”

- Advertisement -