நீங்கள் கடை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்

shop-vastu

நமது அன்றாட தேவைகளை நாம் வாங்கி கொள்ளும் இடமாக கடைகள், வணிக வளாகங்கள் இருக்கின்றன. தினமும் அதிக பணப்புழக்கம் இருக்கும் இடங்களாக நமது வீட்டின் தெருவோர கடைகள் முதல் மிக பெரும் வணிக வளாகங்கள் திகழ்கின்றன. கடை வைத்து மக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரம் செய்து பொருளீட்டுபவர்கள் நமது நாட்டில் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி கடை வைப்பவர்கள் வியாபாரங்கள் அதிகரித்து லாபங்கள் பெருக வாஸ்து விதிகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vasthu

செய்யும் தொழிலே தெய்வம் என்பது நமது தமிழ் பழமொழி. நாம் வாழ்வதற்காக உழைத்து ஈட்டும் செல்வத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் நாம் தொழில் செய்கிற இடத்திற்கும் தர வேண்டியது அவசியம். பணம் புழங்கும் இடம் எல்லாமே லட்சுமி தேவி வாசம் புரிகின்ற இடங்கள் எனவே. அந்த லட்சுமி தேவி கடை வைத்து வியாபாரம் செய்பவர்களின் மீது அருள் புரிய கீழ்கண்ட விதிகளை பின்பற்றுவது அவசியம்.

நீங்கள் எப்படி பட்ட வியாபாரம் செய்வதாக இருந்தாலும், வைக்க போகும் கடைகளுக்கான கட்டிடங்களை தேடும் போதும் “வடக்கு திசை” பார்த்தவாறு வாயில் கொண்ட கடைகளை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும் ஏனெனில் வடக்கு திசை என்பது செல்வகடவுளான “குபேரன்” இருக்கும் திசையாகும். இந்த திசையை பார்த்தவாறு இருக்கும் கடைகளில் வியாபாரம் செய்வதால் வியாபரம் சிறந்து லாபங்கள் பெருகும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடைக்கான கட்டிடத்தில் ஒற்றைப்படையான 3,5,9 எண்ணிக்கையில் கடைகள் இருந்தால், அத்தகைய கடைகளில் ஒன்றை உங்கள் கடைகள் இடமாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே ஒரு கடை கட்டிடம் மட்டும் இருந்தால் அக்கட்டிடத்தில் கடை வைத்துக்கொள்ளலாம்.

shop

வடக்கு திசையை பார்த்தவாறு 2,4 ஆகிய எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்கின்ற கடைகளில் ஒன்றை உங்களின் வியாபாரத்திற்கான கடை வைக்க தேர்வு செய்யலாம். எல்லோருக்குமே வடக்கு திசை பார்த்தவாறு கடைகள் அமைவது சாத்தியமில்லை என்பது உண்மை. எனவே நீங்கள் எந்த திசை நோக்கி வாயில் கொண்ட கடை கட்டிடத்தை தேர்ந்தெடுத்தாலும் பணம் வைக்கும் மேஜை மற்றும் அக்கடையின் உரிமையாளர் வடக்கு, கிழக்கு திசைகளில் ஏதேனும் ஒன்றை பார்த்தவாறு அமரும் வகையில் கடையின் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அமாவாசை தினங்களில் கடைகளுக்கு திருஷ்டி சுற்றி போடுவதால் கடைகளின் வாஸ்து குறைகள் தீர்ந்து உங்களின் வியாபாரங்கள் செழித்து, மிகுந்த லாபங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
ஆரோக்கிய வாழ்விற்கான வாஸ்து

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadai vastu in Tamil. It is also called as Shop vastu in Tamil or Kadai vastu kurippugal in Tamil or Viyabaram vastu in Tamil or Kadai vasthu sastiram in Tamil.