ஆரோக்கியமான வாழ்விற்கான வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்

- Advertisement -

ஆரோக்கியமான மனிதனே உலகின் செல்வந்த மனிதன் ஆவான். நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மனிதனுக்கு உலகையே அவனுக்கு தந்தாலும், அவன் தனது நோய் பாதிப்பு நீங்குவதை பற்றியே அதிக அக்கறை கொள்வான். நமது நாட்டின் கட்டிடங்களின் அமைப்பு பற்றிய பண்டைய கலையான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வசிப்பவர்கள் நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திர விதிகளை பற்றி கூறியிருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் வீட்டின் தலைவாயிலுக்கு முன்பாக வீட்டின் கழிவு நீர் வெளியேறுவது, மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குவது போன்றவை பொதுவான சுகாதார கேடுகளை அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படுவதோடு, இத்தகைய வாஸ்து குறைபாடு அந்த வீட்டின் ஆண் வாரிசுகளின் வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏற்படுத்துவதோடு, அவர்கள் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கபடும் சூழல் உருவாகும். கிழக்கு திசை நோக்கி குளிக்கும் நிலையில் வீட்டின் குளியல் அறையை அமைப்பதால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கடுமையான நோய்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

வீட்டின் தென்கிழக்கு பகுதியே அக்னி மூலை எனப்படும். இந்த அக்னிமூலையில் கிழக்கு நோக்கிய சமையல் அறை அல்லது பூஜை அறை மட்டும் அமைப்பது நல்லது. அக்னி பகவானின் ஆதிக்கம் மிகுந்த இந்த பகுதியில் படுக்கை அறை, குளியலறை மற்றும் கழிவறை, தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, வீட்டின் உள்மூலை படிக்கட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி போன்றவற்றை அமைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேற்கூறியவை அக்னி மூலை பகுதியில் அமையும் பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடுமையான நோய்கள் உண்டாகும். மனநிலை சம்பந்தமான வியாதிகள் ஏற்படலாம். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அகால மரணம் அடைய கூடிய நிலையும் உண்டாகும்.

hospital

வீட்டின் ஈசானிய பாகம் எனப்படும் வடகிழக்கு பகுதி அடைக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனைகள், கருப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது. மேலும் அக்குடும்பத்தின் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பல சிக்கல்களை இத்தகைய வாஸ்து அமைப்பு உருவாக்கும். வாஸ்து குறைபாடு உள்ள சொந்த, வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பலர் இது போன்ற நோய்களால் அவதியுற்றாலும், தங்களின் வீடுகளில் எவருக்கும் நோய்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் வீட்டில் “சஞ்சீவி” மலையை தூக்கியிருக்கும் “ஆஞ்சநேயர்” படத்தை தெற்கு திசை நோக்கியவாறு மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள அனைவரின் ஆரோக்கிய நிலை மேம்படும்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிக்கலாமே:
தெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்

இது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for health in Tamil. It is also called Udal nalam vastu in Tamil or Vastu kurippugal in Tamil or Agni moola vastu in Tamil or Noigalai erpaduthum vasthu or Noigal neenga vastu in Tamil.

- Advertisement -