2 விசில் விட்டா போதும் நிமிடத்தில் இட்லி தோசைக்கு ரொம்பவே வித்தியாசமான சுவையில் இந்த கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கடையலை ரெடி பண்ணிடலாம். சாம்பார் சட்னியை விட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

kaththirikai kadaiyal
- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு நாம் எப்போதும் சட்னி சாம்பார் என்று தான் சைடிஷ் செய்வோம். இதைத் தவிர கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்வதாக இருந்தால் குருமா, வடைகறி என செய்வோம். ஆனால் இப்போது கத்திரிக்காய், உருளைக் கிழங்கு எல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான கடையலை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த கடையல் செய்வதற்கு முதலில் இரண்டு வெங்காயம் இரண்டு தக்காளி இரண்டையும் மீடியம் சைஸில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போல இரண்டு உருளைக்கிழங்கு, மூன்று பச்சை கத்திரிக்காய் இதையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குக்கரில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் அனைத்தையும் சேர்த்த பிறகு பூண்டு ஐந்து பல், மூன்று பச்சை மிளகாய், மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி , கால் ஸ்பூன் மஞ்சள் கால் ஸ்பூன் உப்பு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி அனைத்தையும் சேர்த்து பின் இவை எல்லாம் முழுதும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

குக்கரின் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடி திறந்து வெந்திருக்கும் வெங்காயம் தக்காளி காய்கறிஅனைத்தையும் மத்து வைத்து கடைந்து கொள்ளுங்கள். பிளன்டர் இருந்தால் அதை வைத்தும் மசித்து கொள்ளலாம். இதை மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. இந்த கடையலுக்கு மேற்கொண்டு தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். இது கொஞ்சம் கெட்டியாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு கால் டீஸ்பூன் பெருங்காயம், கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே இதை கடையலில் ஊற்றி கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியத்தை அள்ளி தரும் சுண்டைக்காயை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட இப்படி செய்து கொடுங்க. சுண்டைக்காய் என்றாலே அலருபவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் சலிக்காமல் சாப்பிடுவாங்க.

சுட சுட இட்லி, தோசை, பொங்கல் இவற்றுடன் இந்த கத்திரிக்காய் கடைலை வைத்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி இதை செய்வதற்கான நேரமும் மிகவும் குறைவு. நீங்களும் இந்த சிம்பிள் சூப்பர் ரெசிபியை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -