- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆரோக்கியத்தை அள்ளி தரும் சுண்டைக்காயை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட இப்படி செய்து கொடுங்க....

ஆரோக்கியத்தை அள்ளி தரும் சுண்டைக்காயை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட இப்படி செய்து கொடுங்க. சுண்டைக்காய் என்றாலே அலருபவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் சலிக்காமல் சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த சுண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் சுண்டைக்காயில் இருக்கும் கசப்பு சுவையானது வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்கக் கூடிய சக்தி கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு நாம் சுண்டைக்காய் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். குழந்தைகளை பொருத்த வரையில் இந்த சுண்டைக்காய் சாப்பிடுவதே கிடையாது. அவர்களும் சாப்பிடும் அளவிற்கு மிகவும் சுவையாக சுண்டைக்காயை எப்படி சமைக்கலாம் என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

செய்முறை

முதலில் 200 கிராம் சுண்டைக்காய் எடுத்து நன்றாக கழுவி அதை லேசாக உரலில் இடித்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சுண்டைக்காய் சீக்கிரம் வதங்கும். தண்ணீரில் அலசியதால் கசப்பு தன்மையே இருக்காது.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 ஸ்பூன் உளுந்து இவற்றைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு லேசாக சிவந்து நிறம் மாறியதும், அதில் ஒரு ஸ்பூன் மல்லி மற்றும் ஐந்து வரமிளகாயை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

அதே பாத்திரத்தில் மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 100 கிராம் சின்ன வெங்காயம், 15 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிறிது வதங்கியதும், அதனுடன் நாம் அலசி வைத்திருக்கும் சுண்டைக்காயை சேர்க்க வேண்டும். சுண்டைக்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் 1/2 மூடி தேங்காயை திருகி சேர்க்க வேண்டும். இரண்டு முறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக வறுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக ஆற வைத்து, அதனுடன் ஒரு நெல்லிக்காய் அளவு புளி தேவைக்கேற்ப உப்பையும் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுண்டைக்காய் துவையல் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: தாமரை விதைகள் கறி செய்வது எப்படி

இந்த துவையலை நாம் சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி பிணைந்து சாப்பிடலாம். மேலும் வெரைட்டி ரைஸ்க்கு தொட்டுக் கொள்ளலாம். இந்த துவையலில் சிறிது நீரூற்றி தாளித்து கொட்டி சட்னியாக ஆக்கி, அதை இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சுண்டைக்காயை இந்த முறையில் நாம் செய்து கொடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

சற்று முன்