5 நிமிஷத்துல சட்டுனு கடலை மாவுல நல்ல மொறு மொறுன்னு இப்படி தோசை சுட்டு பாருங்க. இனி தோசை சாப்பிடணும்னு நினைச்ச உடனே டக்குனு இதை செய்திடலாம். டேஸ்ட்டும் செம்மையா இருக்கும்.

- Advertisement -

தென்னிந்திய உணவு வகைகளையே முக்கியமானது என்று சொல்லப் போனால் இந்த இட்லியும் தோசையும் தான். இது இல்லாத வீடே இருக்காது. அதிலும் இட்லியை விட தோசை என்றால் கொஞ்சம் அதிகமாக விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படியான இந்த தோசை சுட அரிசி ஊற வைத்து மாவு அரைத்து செய்ய தான் வேண்டும். இனி தோசை மாவு இல்லாத நேரத்தில் ரொம்ப சுலபமாக நல்ல ஹெல்தியான அதே நேரத்தில் மொறு மொறுன்னு சூப்பரான தோசையை சட்டுனு ரெடி பண்ணிடலாம். வாங்க அந்த தோசை ரெசிபி எப்படி செய்யறன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 1 கப் , வெங்காயம் – 1, தக்காளி – 1, குடை மிளகாய் – 1, கேரட் -1, பச்சை மிளகாய் -4, கருவேப்பிலை -1 கொத்து, கொத்து மல்லி -1 கைப்பிடி, உப்பு – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த தோசை செய்ய வெங்காயம், தக்காளி, மிளகாய், கேரட், குடை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்துமல்லி இவை அனைத்தையும் பொடியாக அரிந்து தனித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பவுலில் கடலை மாவு, பச்சரிசி மாவு ( இதற்கு பச்சரிசி மாவிற்கு பதில் இடியாப்ப மாவு கூட சேர்த்து செய்யலாம்). இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்த பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு ஏற்கனவே அறிந்து வைத்த பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்திற்கு மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்து ரவை தோசை ஊற்றுவது போல மாவு எடுத்து சுற்றிலும் ஊற்றி, தோசை மீது லேசாக எண்ணெய் ஊற்றி சிவந்து வந்ததும் தோசையை எடுத்து விடுங்கள். இதை திருப்பி போட்டு வேக வைக்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: பாய் வீட்டு கல்யாண பிரியாணியின் ரகசியம் இந்த பொடி தானா? 1/2 கிலோ பிரியாணி செய்ய, பாய் மாஸ்டரே சொன்ன, மிகத் துல்லியமான அளவுகளுடன் பர்ஃபெக்ட் ரெசிப்பி! இதோ உங்களுக்காக.

ஒவ்வொரு முறை மாவு எடுக்கும் போதும் நன்றாக கலந்து விட்டு எடுங்கள். இல்லையென்றால் காய்கறிகள் அடியில் தங்கி விடும் மாவு மட்டும் மேலே இருக்கும். இந்த முறையில் தோசை செய்து பாருங்கள் ரொம்ப மொறு மொறுன்னு டேஸ்டா அதே நேரத்தில் நல்ல ஹெல்தியான தோசையை நிமிடத்தில் ரெடி பண்ணிடலாம்.

- Advertisement -