இட்லி, பூரி, சப்பாத்திக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் சூப்பரான இந்த கடலைப்பருப்பு குருமா செஞ்சு பாருங்க. டேஸ்ட் சும்மா வேற லெவல்ல இருக்கும்.

kadalai paruppu kurauma recipe
- Advertisement -

இட்லி பூரி சப்பாத்தி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு எல்லாம் குருமா எப்பொழுதுமே நல்ல சுவையாக இருக்கும். அது அசைவமாக இருந்தாலும் சரி சைவமாக இருந்தாலும் சாதாரணமாக சாப்பிடுவதை விட குருமா இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான குருமா குழம்பை கடலைப்பருப்பை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை 

இந்த குருமா செய்ய முதலில் 150 கிராம் கடலைப்பருப்பை ஒரு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு கடலைப்பருப்பு முழுவதும் வரை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கால் கப் தேங்காய் நல்ல பைன் பேஸ்ட் டாக அரைத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த குருமாவை தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பில் குக்கர் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு லவங்கம், ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து பொரிந்த உடன் இருபது சின்ன வெங்காயத்தை அரிந்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயம் இல்லை என்று ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு 10 பூண்டு பல் ஒரு சிறிய துண்டு இஞ்சி இரண்டையும் நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வெங்காயம் நன்றாக நிறம் மாறும் வரை இவற்றையெல்லாம் வதக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பெரிய தக்காளி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்த பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி குழய வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஏற்கனவே ஊற வைத்த கடலைப்பருப்பை இதில் சேர்த்து வதக்கி விடுங்கள். இவையெல்லாம் வதங்கிய பிறகு கடலைப்பருப்பு ஊற வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இப்போது இதில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் போதும் வரை இந்த மசாலா கொதிக்க வேண்டும்.

இந்த மசாலா நன்றாக கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது இதில் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு பருப்பு ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்த பிறகு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் குக்கரை மூடி ஒரே ஒரு விசில் மட்டும் வரும் வரை காத்திருந்து அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பூஜை செய்த பலனை முழுமையாக பெற வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் பூஜையில் அவசியம் இருக்க வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன?

குக்கரின் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடிய பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மேலே தூவி கலந்து இறக்கி விடுங்கள் நல்ல கமகமவென்று வாசத்துடன் கடலைப்பருப்பு குருமா தயார் இந்த குருமாவுடன் அனைத்து டிபன் வகைகளும் வைத்து சாப்பிட நன்றாகவே இருக்கும் வித்தியாசமான சுவையுடன் அட்டகாசமான எந்த குருமாவை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -